நளினி நெட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நளினி நெட்டோ
தலைமைச் செயலாளர், கேரளம்
பதவியில்
ஏப்ரல் 2017 – ஆகத்து 2017
ஆளுநர்ப. சதாசிவம்
முதலமைச்சர்பிணறாயி விஜயன்
முன்னையவர்எஸ். எம். விஜயானந்த் (ஐ.ஏ.எஸ்)
பின்னவர்டாக்டர் கே.எம்.ஆபிரகாம் (ஐ.ஏ.எஸ்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 ஆகத்து 1957
திருவனந்தபுரம், கேரளம்
துணைவர்டெஸ்மண்ட் நெட்டோ (காவலர்)
முன்னாள் கல்லூரிகேரளப் பல்கலைக்கழகம்
வேலைBureaucrat

நளினி நெட்டோ என்பவர் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சி பணியாளர் ஆவார். இவர் கேரள மாநில தலைமை செயலாளராகப் பணியாற்றினார். தலைமைச் செயலாளராக வருவதற்கு முன்பு, தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் உள்துறைச் செயலர் ஆகிய பதவிகளில் இருந்தார். 2000ஆம் ஆண்டு இவர் போக்குவரத்துச் செயலாளராக இருந்தபோது, கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் நீலலோகிததாசன் நாடார் மீது வழக்குப் பதிவு செய்து செய்திகளில் இடம்பிடித்திருந்தார். [1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

நளினி நெட்டோ 1957 ஆம் ஆண்டு கேரளத்தின் திருவனந்தபுரத்தில் பேராசிரியர் டி. எஸ் ராமகிருஷ்ணனுக்கும், சந்திரா ராமகிருஷ்ணனுக்கும் மகளாகப் பிறந்தார்.[2] நளினியின் சகோதரர் மோகன் இந்திய வருவாய்த்துறை அதிகாரி ஆவார். இவரது கணவர் கேரளாவில் இ.கா.ப அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது உறவினர் கிரிஜா வைத்தியநாதன் தமிழக தலைமைச் செயலாளராக இருந்தார்.[3]

நளினி கேரளா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் மற்றும் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

பணி[தொகு]

நளினி தனது வாழ்க்கையில், 1981 முதல், சுற்றுலாத்துறை செயலாளர், நீர்ப்பாசன செயலாளர், திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் என மாநிலத்தின் முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். பின்னர், தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) பதவியை வகித்த முதல் பெண்மணி என்ற பெருமையை நளினி பெற்றார். தலைமைத் தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார். 2014-ம் ஆண்டு கூடுதல் தலைமைச் செயலாளராக நளினி உயர்ந்தார். இவர் ஏப்ரல் 2017 இல் தலைமைச் செயலாளராக பணியாற்றினார். 2017 இல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு, கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தனிப்பட்ட காரணங்களுக்காக இவர் மார்ச் 2019 இல் அப்பதவியை விட்டு விலகினார்.[4]

பாலியல் துன்புறுத்தல் வழக்கு[தொகு]

1999 ஆம் ஆண்டு, அப்போது போக்குவரத்துச் செயலாளராக இருந்த நளினி, கேரள போக்குவரத்து அமைச்சர் நீலலோஹிததாசன் நாடார் மூலம் தான்  பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றம்சாட்டினார். இந்த வழக்கில் பின்னர் நாடார் விடுவிக்கப்பட்டாலும், அரசியல்வாதிக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்ததன் மூலம் ஐஏஎஸ் அதிகாரி ஒரு வலுவான செய்தியைத் தந்தார். சட்டப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரியாக இருந்து டி. பி. சுந்தரராஜன் இவருக்குகாக வழக்கு தொடர்ந்தவர்.[5] இந்த நிகழ்விற்கு முன்பு வன அதிகாரி பிரகிருதி ஸ்ரீவஸ்தவா தாக்கல் செய்த இதே போன்ற வழக்கிற்காக நாடார் தண்டிக்கப்பட்டார். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Battle Of The Atoms". outlookindia.com/. http://www.outlookindia.com/magazine/story/battle-of-the-atoms/225546. 
  2. "Archived copy". Archived from the original on 30 April 2016. பார்க்கப்பட்ட நாள் 1 May 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Now, Two Cousins, Nalini And Girija, Head The Bureaucracy Of Kerala And Tamil Nadu". outlookindia.com/. http://www.outlookindia.com/website/story/now-two-cousins-nalini-and-girija-head-the-bureaucracy-of-kerala-and-tamil-nadu/298387. 
  4. Staff Reporter (2019-03-12). "Nalini Netto quits as CM's Principal Secretary" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/nalini-netto-quits-as-cms-principal-secretary/article26515274.ece. 
  5. "The Secret of the Temple". The New Yorker. பார்க்கப்பட்ட நாள் 2017-05-01.
  6. "The Telegraph - Calcutta : Nation". www.telegraphindia.com. Archived from the original on 30 September 2004. பார்க்கப்பட்ட நாள் 2017-04-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நளினி_நெட்டோ&oldid=3794541" இலிருந்து மீள்விக்கப்பட்டது