கிரிஜா வைத்தியநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிரிஜா வைத்தியநாதன் (பிறப்பு:1 சூலை 1959) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 1981-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.

வாழ்க்கை குறிப்புகள்[தொகு]

இவரது தந்தை ச. வெங்கிடரமணன் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக (1990 - 1992) இருந்தவர்.[1]

இவர் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான எஸ். வி. சேகரின் மைத்துனியாவார்.[2][3]

கல்வி[தொகு]

இயற்பியலில் முதுநிலை படிப்பும், நல வாழ்வு பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

1981 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தேர்வில் பெண்களில் முதல் இடத்தையும், தேர்வுக்குத் தோற்றிய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களில் ஒன்பதாவது இடத்தையும் பெற்றார்.[3]

அரசுப் பணிகள்[தொகு]

2011-இல் சுகாதாரச் செயலராக இருந்த கிரிஜா வைத்தியநாதன், ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தை புதிதாக வடிவமைத்தவர். மேலும் தமிழ்நாட்டின் நிதித்துறை, பள்ளிக் கல்வித் துறை, நில நிர்வாகத் துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத் துறைகளில் பணியாற்றியவர்.

2016-இல் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த கிரிஜா வைத்தியநாதன், நில நிர்வாகம் மற்றும் வருவாய் துறை ஆணையராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

தலைமைச் செயலர் பதவியில்[தொகு]

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலராக 22 டிசம்பர் 2016 அன்று தமிழக ஆளுநரால் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டு , 2019 வரை அப்பதவியயை வகித்தார் .நிர்வாக சீர்திருத்தம், கண்காணிப்பு ஆணையர் ஆகிய பதவிகள் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டன.[4][5]

இவர் தமிழ் நாட்டின் 45 ஆவது தலைமைச் செயலராவார் என்பதுடன் நான்காவது பெண் தலைமைச் செயலருமாவார். இதற்கு முன்னர் லட்சுமி பிரானேஷ், எஸ். மாலதி, ஷீலா பாலகிருஷ்ணன் ஆகிய பெண்கள் தலைமைச் செயலர்களாகப் பணியாற்றியுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "AIADMK’s pick of no-nonsense Girija Vaidhyanathan as Chief Secretary surprises many". இந்தியன் எக்ஸ்பிரஸ் (23 டிசம்பர்2016). மூல முகவரியிலிருந்து 23 டிசம்பர்2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 டிசம்பர்2016.
  2. "What led to the appointment of Girija Vaidyanathan as TN chief secretary?". oneindia.com (22 டிசம்பர் 2016). மூல முகவரியிலிருந்து 23 டிசம்பர் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 டிசம்பர் 2016.
  3. 3.0 3.1 3.2 "Chennai-born Girija is new chief secretary". டைம்ஸ் ஆஃப் இந்தியா (23 டிசம்பர் 2016). மூல முகவரியிலிருந்து 23 டிசம்பர் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 டிசம்பர் 2016.
  4. "Girija Vaidyanathan is new TN Chief Secretary, Rama Mohana Rao sacked". டெக்கான் க்ரானிக்கிள் (22 டிசம்பர் 2016). மூல முகவரியிலிருந்து 22 டிசம்பர் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 டிசம்பர் 2016.
  5. Girija Vaidyanathan appointed Chief Secretary of Tamil Nadu
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஜா_வைத்தியநாதன்&oldid=2805359" இருந்து மீள்விக்கப்பட்டது