நற்கருணை அற்புதங்கள்
சுருக்கமான
நற்கருணைநற்கருணைப்புதுமை
அற்புதங்கள் என்பவை நற்கருணையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உண்மையிலேயே பிரசன்னமாகி இருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில், கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில் நிகழ்ந்த அற்புதங்கள் ஆகும். உலகின் பல்வேறு இடங்களில் இத்தகைய அற்புதங்கள் நடந்திருக்கின்றன.
சுருக்கமானநற்கருணைபுதுமை
[தொகு]கத்தோலிக்க திருச்சபையின் போதனைப்படி, திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படும் அப்பம் கிறிஸ்துவின் உடலாகவும், இரசம் அவரது இரத்தமாகவும் மாற்றம் அடைகின்றன; மேலும் இயேசு தனது ஆன்மாவோடும் இறைத் தன்மையோடும் அவற்றில் பிரசன்னமாகி இருக்கிறார். அர்ப்பண பொருட்களின் வெளித் தோற்றமும் பண்புகளும் மாற்றம் அடையாமலே இவை நடைபெறுகின்றன. இது பொருள் மாற்றம் என்று அழைக்கப்படுகிறது.
கோதுமை அப்பம், திராட்சை இரசம் ஆகியவை தனித்தனியே ஒப்புக்கொடுக்கப்படுவது, கல்வாரியில் இயேசுவின் உடலில் இருந்து இரத்தம் தனியே பிரிக்கப்பட்டதை அடையாளப்படுத்துகிறது. இருந்தபோதிலும் அவர் உயிர்த்து எழுந்ததால், அவரது உடலும் இரத்தமும் எப்போதும் பிரிந்திருப்பதில்லை என்று திருச்சபை போதிக்கிறது; ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்றும் இருக்கிறது. எனவே, குருவானவர் அப்பத்தை உயர்த்தி "கிறிஸ்துவின் உடல்" என்றும், இரசக் கிண்ணத்தை உயர்த்தி "கிறிஸ்துவின் இரத்தம்" என்றும் கூறினாலும் அங்கு கிறிஸ்து முழுமையாக பிரசன்னமாகி இருக்கிறார்,
அற்புதங்கள்
[தொகு]சீர்திருத்த காலத்துக்கு பிறகு, நற்கருணை மீதான பக்தி முயற்சிகள் தவறான கண்ணோட்டத்துடன் நோக்கப்பட்டு சிலை வழிபாடாக கருதப்பட்டன. ஆனாலும் கத்தோலிக்க திருச்சபை, நற்கருணையில் இயேசு கிறிஸ்துவின் உண்மை பிரசன்னம் இருப்பதை இன்றளவும் நம்பி ஏற்று வருகிறது. இதற்கு காரணம் வரலாற்றில் நிகழ்ந்த பல்வேறு நற்கருணை அற்புதங்கள் ஆகும்.[1]
நற்கருணை அற்புதங்கள் மூன்று வகைப்படும். அவை,
- 1. நற்கருணை அப்பமும் இரசமும், உண்மையான சதையாகவும் இரத்தமாகவும் மாறுதல்.
- 2. நற்கருணை அப்பம் பல ஆண்டுகள் அழியாமல் இருத்தல்.
- 3. நற்கருணையின் பிரசன்னத்தால் அதிசயங்கள் நிகழ்தல்.
சில அதிசயங்கள்
[தொகு]கி.பி. 750ஆம் ஆண்டு இத்தாலியின் லான்சியானோ என்ற இடத்தில், புனித பிரான்சிஸ் ஆலயத்தில் குருவானவர் ஒருவரால் திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்பட்ட அப்பமும் இரசமும், இயேசுவின் உண்மையான சதையாகவும், இரத்தமாகவும் மாறின. அவை, அங்குள்ள ஆலயத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.[2] அச்சதை மனித இதயத்தின் சதை என்றும், அந்த இரத்தம் ஏபி (AB) வகையைச் சார்ந்தது என்றும் தற்கால ஆய்வுகள் கூறுகின்றன.
கி.பி. 1400ஆம் ஆண்டு ஹாலந்து நாட்டின் பாக்ஸ்மீர் என்ற இடத்தில், புனித பேதுரு, பவுல் ஆலயத்தில் அர்னால்டஸ் க்ரோயன் என்ற குரு திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது இரசம் இரத்தமாக மாறி இரசப் பாத்திரத்தில் இருந்து பொங்கி வழிந்தது. அந்த இரத்தம் சிந்திய துணி இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.[3]
கி.பி. 1730 ஆகஸ்ட் 14ந்தேதி இத்தாலியின் சியன்னா நகரில், புனித பிரான்சிஸ் ஆலயத்தில் நுழைந்த கொள்ளையர்கள் நற்கருணை பேழையில் வைக்கப்பட்டிருந்த, நற்கருணை அப்பங்கள் இருந்த தங்கப் பாத்திரத்தை தூக்கிச் சென்றுவிட்டனர். அந்த கொள்ளையர்கள் வீசியெறிந்த நற்கருணை அப்பங்கள், இரண்டு நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 17ந்தேதி மீண்டும் கண்டெடுக்கப்பட்டன. அந்த நற்கருணை அப்பங்கள் இன்றளவும் அழியாமல் இருக்கின்றன.[4] திருப்பலிக்காக பயன்படுத்தப்படும் அப்பங்கள் சாதாரணமாக 10 ஆண்டுகளில் அழியக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
கி.பி. 1990களில் இருந்தே தென் கொரியாவின் நாஜூ பகுதியைச் சார்ந்த ஜூலியா கிம் என்ற பெண்மணி நற்கருணை வாங்கிய பல நேரங்களில், நற்கருணை அப்பம் உண்மையான சதையாக மாறியதை பலரும் பார்த்திருக்கின்றனர்.[5] திருத்தந்தை 2ம் ஜான் பால் இந்த அற்புதத்தை ஒருமுறை நேரில் பார்த்திருக்கிறார்.[6] பல ஆய்வுகளும் இந்த அற்புதங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்திருக்கின்றன.
மேலும் காண்க
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- The Real Presence Association - Eucharistic Miracles
- Eucharistic Miracles பரணிடப்பட்டது 2009-02-03 at the வந்தவழி இயந்திரம்
- http://www.zenit.org/english/visualizza.phtml?sid=70440[தொடர்பிழந்த இணைப்பு]
- http://www.zenit.org/article-12933?l=english பரணிடப்பட்டது 2011-01-02 at the வந்தவழி இயந்திரம் (Lanciano, and Congress about such miracles)
- http://www.therealpresence.org/eucharst/mir/lanciano.html