நர்மதா கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நர்மதா கார்
Narmada Kar
பிறப்பு(1893-10-12)12 அக்டோபர் 1893
கட்டக், ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு13 செப்டம்பர் 1980(1980-09-13) (அகவை 86)
கொல்கத்தா, இந்தியா
அறியப்படுவதுஒடிசாவின் முதலாவது பெண் பட்டதாரி
வாழ்க்கைத்
துணை
இயிதேந்திர குமார் பிசுவாசு

நர்மதா கார் (Narmada Kar) ஒடிசா மாநிலத்தில் இளம் கலை பட்டப்படிப்பில் தேர்ச்சியடைந்த முதலாவது பெண்ணாவார்..[1] 1893 முதல் 1980 வரையிலான ஆண்டுகளில் இவர் வாழ்ந்தார்.

வாழ்க்கை[தொகு]

1893 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி சுதந்திர போராட்ட வீர்ரும் சமூக ஆர்வலரும் கட்டாக்கில் உத்கல் சாகித்யா என்ற கலாச்சார நிறுவனத்தை நிறுவியவருமான பிசுவநாத் காருக்கு மகளாக நர்மதா கார் பிறந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர், வரலாற்றுச் சிறப்பு மிக்க பெதுன் கல்லூரியில் நர்மதா சேர்ந்தார். 1914 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்து ஒடிசாவின் முதல் பெண் பட்டதாரி ஆனார்.[2] தன்னுடைய 16 ஆவது வயதில் பெங்காலி வழக்கறிஞரான இயிதேந்திர பிசுவாசை மணந்தார். குழந்தைகளின் கல்விக்காக இத்தம்பதியினர் கொல்கத்தாவில் தங்கினர்.

இறப்பு[தொகு]

1980 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 அன்று இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் நர்மதா கார் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நர்மதா_கார்&oldid=3052914" இருந்து மீள்விக்கப்பட்டது