நம்கியால் திபெத்தியல் நிறுவனம்

ஆள்கூறுகள்: 27°18′57″N 88°36′17″E / 27.3159°N 88.6047°E / 27.3159; 88.6047
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நம்கியால் திபெத்தியல்  நிறுவனம்
Namgyal Institute of Tibetology
நுழைவாயில்
Map
நிறுவப்பட்டதுஅக்டோபர் 1, 1958 (1958-10-01)[1]
அமைவிடம்கேங்டாக், சிக்கிம், இந்தியா
வலைத்தளம்tibetology.net

நம்கியால் திபெத்தியல்  நிறுவனம் (Namgyal Institute of Tibetology) என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் உள்ள ஒரு திபெத் அருங்காட்சியகம் ஆகும். சிக்கிமின் 11 வது சோக்யால் மன்னர் சர் தாசி நம்கியால் பெயரிடப்பட்டது. இந்த நிறுவனம் ஆராய்ச்சியாளர்களைப் பணியமர்த்தி ஊக்குவிக்கிறது. சிக்கிமின் 60 மடாலயங்களின் சமூக வரலாற்றை ஆவணப்படுத்தி கணினியில் பதிவுசெய்யும் திட்டம் இந்நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சி திட்டங்களில் ஒன்றாகும். சிக்கிமின் பழைய மற்றும் அரிய புகைப்படங்களை அறிவுப் பகிர்தலுக்காக இலக்கமுறை மையமாக்கி ஆவணப்படுத்த முயல்வதும் மற்றொரு திட்டமாகும். இந்நிறுவனத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நியிங்மா கல்லூரியின் தலைவராக கெம்போ தாசர் தலைவராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். [2]

வரலாறு[தொகு]

14 வது தலாய் லாமா 1957 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதியன்று அருங்காட்சியகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். [3] 1958 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதியன்று அன்று , இந்தியாவின் பிரதமராக இருந்த பண்டிட் சவகர்லால் நேரு சிக்கிம் திபெத்தியல் ஆராய்ச்சி நிறுவனத்தைத் திறந்து வைத்தார். சிக்கிம் மகாராசாவாக இருந்த சர் தாசி நம்கியால் இதன் பெயரை நம்கியால் திபெத்தியல் ஆராய்ச்சி நிறுவனம் என்று பெயர் மாற்றினார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. American University (Washington, D.C.). Foreign Areas Studies Division (1964). Area Handbook for Nepal (with Sikkim and Bhutan). U.S. Government Printing Office. pp. 372–.
  2. Silverstone, Marilyn. "Five Nyingma Lamas in Sikkim" (PDF). pp. 13-.
  3. Central Asia. Area Study Centre (Central Asia), University of Peshawar. 2006.
  4. American Institute of Indian Studies Quarterly Newsletter. American Institute of Indian Studies. 1980.

புற இணைப்புகள்[தொகு]