நந்தூரி ராமமோகனராவ்
நந்தூரி ராமமோகனராவ் ( Nanduri Ramamohanarao ) (24 ஏப்ரல் 1927 - 2 செப்டம்பர் 2011) ஓர் தெலுங்கு எழுத்தாளரும் மற்றும் பத்திரிகையாளரும் ஆவார்.[1][2] ஆந்திர ஜோதி என்ற தெலுங்கு நாளிதழ் 1960 இல் தொடங்கப்பட்டதிலிருந்து 1994 இல் தான் ஓய்வு பெறும்வரை பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். ஆங்கிலத்திலிருந்து தெலுங்கிற்கு ஏராளமான படைப்புகளை மொழிபெயர்த்தார். குழந்தைகளுக்காக பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் கவிஞராகவும் பாடலாசிரியராகவும் இருந்தார். மேலும், இவர் ஒரு நல்ல இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருந்தார்.
வாழ்க்கை
[தொகு]ராம மோகனராவ் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள விஸ்ஸன்னபேட்டா மண்டலத்தில் பிறந்தார். இவர் 1937-1942 க்கு இடையில் நுஸ்விட் மற்றும் மச்சிலிப்பட்டிணத்தில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். 1942-1947 க்கு இடையில் ராஜமன்ரியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தார். 1944ல் ராசேசுவரி என்பவரை மணந்தார்.
நந்தூரி, 1948-1960 க்கு இடையில் "ஆந்திரா பத்ரிகா" என்ற தெலுங்கு நாளிதழில் பல்வேறு ஆசிரியர் பதவிகளில் பணியாற்றினார். பின்னர் உதயம் நாளிதழில் கெளரவ ஆசிரியராக தனது சேவைகளை ஆற்றினார்.[3] பின்னர், இவர் 1960 இல் புதிதாக உருவாக்கப்பட்ட "ஆந்திரஜோதி" பத்திரிகையில் சேர்ந்தார். அங்கு இவர் ஆசிரியராக இருந்து 1994 இல் ஓய்வு பெற்றார்.
இறப்பு
[தொகு]இவர் 2 செப்டம்பர் 2011 அன்று உள்விழி இரத்தக்கசிவு காரணமாக இந்தியாவின் விசயவாடாவில் இறந்தார்.[4] இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "History of a Telugu daily". தி இந்து. 2 November 2004. http://www.hindu.com/br/2004/11/02/stories/2004110200031502.htm. பார்த்த நாள்: 8 September 2011.
- ↑ Ramanujachary, N. C. (7 September 2004). "Survey of Telugu literature". தி இந்து. http://www.hindu.com/br/2004/09/07/stories/2004090700011401.htm. பார்த்த நாள்: 8 September 2011.
- ↑ The Book review. C. Chari for Perspective Publications. 2002.
- ↑ "Nanduri no more". ibnlive.com. 3 September 2011 இம் மூலத்தில் இருந்து 17 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121017164720/http://ibnlive.in.com/news/nanduri-no-more/180935-60-114.html. பார்த்த நாள்: 8 September 2011.
- An article in the Telugu website pustakam.net - http://pustakam.net/?p=8125
- Swarnabhinandana - A book released on the occasion of Nanduri Ramamohana Rao's Golden Jubilee in Journalism, in 1997.