நந்தா மாலினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்தா மாலினி
பிறப்பு23 ஆகத்து 1943 (1943-08-23) (அகவை 80)
அளுத்கமை, இலங்கை
தேசியம்இலங்கையர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஸ்ரீ குனநந்த வித்யாலயா
ஹேவுட் கலை நிறுவனம்
பாத்காந்தே இசைப்பள்ளி (1963)
பணிபாடகர், விரிவுரையாளர், இசையமைப்பாளர்.
வாழ்க்கைத்
துணை
சுனீத் கோகுல
பிள்ளைகள்வாருணி சரோஜா, அமா சாரதா
விருதுகள்மதிப்புறு முனைவர் பட்டம் (கலை)-2017)

நந்தா மாலினி அல்லது நந்தா மாலனி (Nanda Malini, சிங்களம்:නන්දා මාලනී) (பிறப்பு 23 ஆகஸ்ட், 1943) ஓர் இலங்கைப் பாடகர் ஆவார். இலங்கையில் நன்கு அறியப்பட்ட புகழ்பெற்ற பாடகர் ஆவார். இவருடைய பாடல்கள் உண்மையான வாழ்க்கை மற்றும் சமூகக் கலாச்சார சூழல்களை கருப்பொருளாகக் கொண்டவை. இவருடைய பாடல்கள் மனிதர் வாழ்க்கையின் உண்மைகள், உறவுச் சிக்கல்கள், வாழ்க்கைச் சூழல், உணர்ச்சிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டவை.[1] நந்த மாலினி இலங்கையில் கர்நாடக இசையில் ஓர் புதிய அத்தியாயத்தை உருவாக்கியவர்.

இளமை[தொகு]

இலங்கையில் அளுத்தகமையில் லெவந்தவை என்ற இடத்தில் பிறந்தார். ஊரகப்புறமான அந்த கிராமத்தில் ஒன்பது குடும்பங்களே இருந்தன. இவரது குடும்பம் கொழும்பில் கொட்டாஞ்சேனைக்குக் குடிபெயர்ந்தது. நந்த மாலினி, ஸ்ரீ குணநந்த வித்யாலாவில் சேர்க்கப்பட்டார். அங்கு டி. என். மார்கரெட் பிரேரா இவருடைய பாதுகாவலராக இருந்தார். இப்பள்ளியில் ஒரு கவிதைப்போட்டியில் வென்றார். இதனால் இவரை இலங்கை வானொலியில் பாட டபிள்யூ. டி. அமரதேவா அழைப்புவிடுத்தார். வானொலியில் கருணாரத்தின அபேய்செகர என்பவர் நடத்திய லாமா மண்டபாயா என்ற புகழ்பெற்ற நிகழ்ச்சியில், புது சாது என்ற புகழ்பெற்ற பாடலை நந்த மாலினி பாடினார்.[2]

அரங்கேற்றம்[தொகு]

நந்த மாலினி தனது பாடல்களால் புகழ்பெற்றிருந்த போதும், விக்டர் பிரேரா என்பவரிடம் பயிற்சியைத் தொடர்ந்தார். ஹேவுட் கலைப் பல்கலைக்கழகத்தில் ஒருவருடம் பயின்றார். பின் 1963 இல் இந்தியாவின் லக்னோவில் பாத்காந்தே இசைப்பள்ளியில் சேர்ந்தார். 1984 இல் பல்கலைக்கழகத்தில் விசாரதே பட்டம் பெறுவதற்காக மீண்டும் இலங்கை திரும்ப வேண்டியதாயிற்று. அதன் பின் இவர் அமரதேவா நடத்திய மதுவந்திபாடல்கள் என்ற இசை நிகழ்ச்சியில் தொடர்ந்து பாடினார். 'சன்னலியானே', 'ரம் தாதியா பிந்து பிந்து' ஆகிய இவரின் பாடல்கள் குறிப்பிடத்தகவை. இவரது பாடல்கள் ஒரு கோவை போல வெற்றிகரமாக வெளிவந்தன. இவரது பாடல்கள், அன்பு, மனித உறவுகள், உணர்வுகள் ஆகிய உண்மையான வாழ்க்கைச் சூழலை வெளிப்படுத்துவதாய் இருந்தது. இவரது பாடலான 'பிப்புனு மாலே ருவா', 'சுது ஹாமினி', 'காடா மண்டியே' ஆகியவை பெண்களின் இதயத்துள்ளிருந்த உண்மை உணர்வுகளை வெளிப்படுத்துவதாய் இருந்தன. 'மந்த நாவா கரநாவா' என்ற பாடல் தனிமையில் தவிக்கும் பெண்ணின் நகைச்சுவையுணர்வைக் காட்டுவதாய் அமைந்தது.[1][3]

இசை நிகழ்வுகள்[தொகு]

1971 ஆம் ஆண்டில் நந்தா, ஸ்ரவன ஆராதனா என்ற இசை நிகழ்ச்சியில் பண்டிட் அமராதேவாவுடன் இணைந்து பணியாற்றினார். 1973 இல் இவர் தனி இசை நிகழ்ச்சித் தொடரைத் தொடங்கினார். 530 நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து மே 22, 1979 இல் இந்நிகழ்ச்சி முடிவடைந்தது. 1981 இல் மற்றொரு இசை நிகழ்ச்சித் தொடரான சாத்யாய கீதாயா என்பதைத் தொடங்கினார். இந்நிகழ்ச்சி ஐந்நூறு நிகழ்ச்சிகளுடன் 1984, ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. 1987 ஜூன் மாதம் நந்தா தனது அடுத்த இசை நிகழ்ச்சியான பாவனாவைத் தொடங்கினார். இது 205 நிகழ்ச்சிகளுடன் பதினெட்டு மாதங்கள் நடைபெற்றது. இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2010 இல் சிரசா எஃப். எம் உடன் இணைந்து ஸ்வேத ராத்ரியா என்ற இவரது புதிய இசை நிகழ்ச்சியை வழங்கினார்.[4]

விருதுகள்[தொகு]

நந்நா மாலினி ஒன்பது சரசவ்விய விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த பெண் பாடகருக்கான எட்டு குடியரசுத் தலைவர் விருதுகளைப் பெற்றவர். காட்சி மற்றும் நிகழ்த்துக்கலைகளுக்ககான பல்கலைக்கழகம் இவருக்கு 2017 ஆம் ஆண்டு தர்சன சூரி சம்மன்னா என்ற மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கியது.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தா_மாலினி&oldid=3792183" இருந்து மீள்விக்கப்பட்டது