நதியா கான்
நதியா கான் (Nadia Khan) (பிறப்பு 22 மே 1979) ஒரு பாகிஸ்தான் தொலைக்காட்சி நடிகை, தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். தொலைக்காட்சியின் காலை நிகழ்ச்சியான தி நாடியா கான் ஷோ மற்றும் அவரது யூடியூப் சேனலான அவுட்ஸ்டைல் ஆகியவற்றிற்காக அவர் மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார். [1] [2] கிளாசிக் பி.டி.வி தொடரான பந்தனில் நடித்துள்ளார். மேலும், ஐசி ஹை தன்ஹாயில் கின்ஸா கதாபாத்திரத்திற்காக, கான் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார். 2019 ஆம் ஆண்டில், அவர் காம் ஸார்ஃப் தொடரில் ஐமா மற்றும் டோலி டார்லிங்கில் தொடரில் டோலி ஆகியோரை சித்தரித்தார்.[3]
ஆரம்பகால வாழ்க்கை[தொகு]
நதியா கான் பலூசிஸ்தானின் குவெட்டாவில் உள்ள பதான் குடும்பத்தில் பிறந்தார். அவர் இளம் வயதிலேயே பஞ்சாபின் ராவல்பிண்டிக்கு குடிபெயர்ந்தார். கான் தனது தொழில் வாழ்க்கையை பஞ்சாபின் ராவல்பிண்டியில் தொடங்கினார். [4] [5]
தொழில்[தொகு]
நதியா கான்,1996 ஆம் ஆண்டில் ஹசீனா மொயின் எழுதிய பால் தோ பால் என்ற நிகழ்ச்சியில் அறிமுகமானார். [6] அவர் பந்தன் (1997) தொடரில் நடிப்பிற்கான அங்கீகாரத்தைப் பெற்றார். அதற்காக அவர் பி.டி.வி சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். அதே ஆண்டில், எம். இஷார் பாபி எழுதி இயக்கிய பாரம் என்ற தனியார் துறையிலிருந்து ஒரு நாடக தொடர் வெளியிடப்பட்டது. இதில் கான் ஒரு முக்கிய பாத்திரத்தில் இளம் யாசிர் நவாஸுடன் நடித்தார். பின்னர் அவர் தொலைக்காட்சியில் காலை நிகழ்ச்சிகளை தொகுக்கத் தொடங்கினார்.
2005 ஆம் ஆண்டில், கான் மீண்டும் நடிப்புக்கு வந்தார், ஹசீப் ஹசன் இயக்கிய மற்றும் டேனிஷ் ஜாவேத் எழுதிய கோய் டூ ஹோ என்ற ஏ.ஆர்.வொய். டிஜிட்டல் சோப் தொடரில் தோன்றினார். [ மேற்கோள் தேவை ] 2011 ஆம் ஆண்டில், லாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான சோயிப் மன்சூர், கான் தனது போல் படத்தில் இவருக்கு ஒரு கதாபாத்திரத்தை வழங்கினார்.
வழங்குபவர்[தொகு]
1993 ஆம் ஆண்டில் பி.டி.வி- யில் "மாமா சர்காமுடன் டாக் டைம் (மெயில் டைம்) நிகழ்ச்சியில் நதியா கான் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.[7] ஏ.ஆர்.வொய். டிஜிட்டலின் காலை நிகழ்ச்சியான 'நாடியாவுடன் காலை உணவு' நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார். இந்த நிகழ்ச்சி 2003 ல் துபாயிலிருந்து ஒளிபரப்பப்பட்டது. நவம்பர் 13, 2006 அன்று, கான் ஜியோ டிவிக்கு நாடியா கான் ஷோ ( ஜியோ மஸே சே ) என்ற புதிய நேரடி அரட்டை மற்றும் நேர்காணல் நிகழ்ச்சிக்கு சென்றார். அந்நிகழ்ச்சியில், அவர் பல்வேறு பாகிஸ்தான் பிரபலங்கள், கலைஞர்கள், மதத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகளை பேட்டி கண்டார். இஸ்லாம், சுகாதாரம் மற்றும் அழகு மற்றும் பிற தலைப்புகள் பற்றிய பிரிவுகளும் இருந்தன. நீதிமன்ற உத்தரவு சார்பாக இந்த நிகழ்ச்சியை துபாய் அரசு 2010 இல் தடை செய்தது. பாக்கிஸ்தானிய திரைப்பட நட்சத்திரம் நூர் புகாரி மற்றும் அவரது கணவர் புகாரியின் நேர்காணலுக்கு முன்பு சண்டையிட்டதை கான், தொலைக்காட்சியில் காட்டியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது கணவர் நீதிமன்றத்தில் "இது எங்கள் குடும்ப விஷயம்" என்று கூறினார். எனவே, துபாயில் கானின் நிகழ்ச்சியை ஆறு மாதங்களுக்கு தடை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. [8]
ஜீ டிவி, சோனி டிவி, ஸ்டார் பிளஸ் மற்றும் ஏ.ஆர்.வொய். டிஜிட்டல் ஆகியவற்றில் இருந்து வந்த ஐந்து வேட்பாளர்களில் கான் சிறந்த தொலைக்காட்சி வழங்குநர் 2008 க்கான மசாலா வாழ்க்கை முறை விருதுகளையும் சிறந்த தொலைக்காட்சி வழங்குநருக்கான மசாலா வாழ்க்கை முறை விருதுகளையும் வென்றார். [9] ஆகஸ்ட் 2011 இல் துன்யா நியூஸில் ஈத் டிரான்ஸ்மிஷன் மூலம் கான் தனது தொகுப்பாளர் வாழ்க்கையை மீண்டும் தொடங்கினார். 31 மார்ச் 2012 அன்று, நாடியா கான் நிகழ்ச்சி ஜியோ டிவியில் இரவு நேர பேச்சு நிகழ்ச்சியாக திரும்பியது. அவரது நிகழ்ச்சிகள் இப்போது நுகர்வோர் சார்ந்தவையாக உள்ளது. [10] ஜியோ டிவியில் தனது காலை நிகழ்ச்சியின் ( நாடியா கான் ஷோ ) 2015 முதல் 2016 வரை சுருக்கமான ஆண்டு ஓடுதலுடன் மீண்டும் தொகுக்கத் தொடங்கினார். அவர் போல்(பிஓஎல்) என்டர்டெயின்மென்ட்டில் குரோன் மெய்ன் கேல் என்ற விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
ஜனவரி19, 2018 அன்று, தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலான அவுட்ஸ்டைலில் 100,000 சந்தாதாரர்களை பெற்றுள்ள முதல் பாகிஸ்தான் அழகு, பேஷன் மற்றும் வாழ்க்கை முறை யூடியூப் செல்வாக்கு பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றார். [11] [12]
விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]
2007 ஆம் ஆண்டில், நதியா கான், பாக்கிஸ்தானின் " ஓப்ரா வின்ஃப்ரே " என்று ஜாங் குரூப் ஆஃப் செய்தித்தாள்களால் அழைக்கப்பட்டார்.[13]
பி.டி.வி விருதுகள்[தொகு]
- வெற்றி
- 1997: சிறந்த நடிகர் (பெண்); பந்தன் [14]
மசாலா வாழ்க்கை முறை விருதுகள்[தொகு]
- வெற்றி
- 2008: சிறந்த தொலைக்காட்சி வழங்குநர்; நதியா கான் ஷோ [9]
குறிப்புகள்[தொகு]
- ↑ "We must teach young girls to aspire beyond marriage: Nadia Khan | The Express Tribune". https://tribune.com.pk/story/1656994/4-must-teach-young-girls-aspire-beyond-marriage-nadia-khan/.
- ↑ "'Baat Cheet' with Fahim Burney, Nadia Khan" இம் மூலத்தில் இருந்து 5 டிசம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191205102234/https://nation.com.pk/01-Oct-2018/baat-cheet-with-fahim-burney-nadia-khan.
- ↑ Haq, Irfan Ul (8 December 2018). "Nadia Khan's new TV project is a game show where you can win diamonds or a Mercedes". https://images.dawn.com/news/1181429.
- ↑ Nadia Khan Biography. Tv.com.pk. Retrieved 17 November 2017.
- ↑ Nadia Khan – The Express Tribune Blog பரணிடப்பட்டது 2019-12-05 at the வந்தவழி இயந்திரம். The Express Tribune. Retrieved 17 November 2017.
- ↑ "Pal do Pal". Ptv2.tripod.com. http://ptv2.tripod.com/p/paldp.htm.
- ↑ "Child's play". http://archives.dawn.com/weekly/images/archive/050501/images16.htm.
- ↑ "Nadia Khan Show Banned by Dubai Govt". Forum.xcitefun.net. http://forum.xcitefun.net/nadia-khan-show-banned-by-dubai-govt-t55478.html.
- ↑ 9.0 9.1 "Masala Lifestyle Awards – The Winners". Masala.com. 5 December 2008 இம் மூலத்தில் இருந்து 14 August 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110814063405/http://www.masala.com/8863.
- ↑ "Nadia Khan Show on 8th April 2012 guest Veena Malik ~ Nadia Khan Show". Nadiakhanshowgeo.com. 10 April 2012 இம் மூலத்தில் இருந்து 14 December 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121214062511/http://www.nadiakhanshowgeo.com/2012/04/nadia-khan-show-on-8th-april-2012-guest.html.
- ↑ "Nadia khan's Outstyle Youtube channel reached 100,000 subscribers ~ Outstyle.com". https://irfanistan.net/nadia-khans-outstyle-youtube-channel-reached-100000-subscribers/.
- ↑ "After doing three tragic dramas, Nadia Khan wears a fresh and lively look!" இம் மூலத்தில் இருந்து 2019-12-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191205102233/https://nation.com.pk/13-May-2018/after-doing-three-tragic-dramas-nadia-khan-wears-a-fresh-and-lively-look.
- ↑ "Nadia Khan Anchor Person/ Actress/ Producer Dunya TV / Geo News". Urduwire.com. http://www.urduwire.com/people/Nadia-Khan_117.aspx.
- ↑ "Nadia Khan | Fashion47". Fashion47.pk இம் மூலத்தில் இருந்து 14 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121114214202/http://www.fashion47.pk/birthday-calendar/nadia-khan/.