உள்ளடக்கத்துக்குச் செல்

நடு அந்தமான் தீவு

ஆள்கூறுகள்: 12°30′N 92°50′E / 12.500°N 92.833°E / 12.500; 92.833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடு அந்தமான்
Middle Andaman
அந்தமான் தீவுகளில் மத்திய அந்தமான் தீவி அமைவிடம் (சிவப்பு).
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்12°30′N 92°50′E / 12.500°N 92.833°E / 12.500; 92.833
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
பரப்பளவு1,535.5 km2 (592.9 sq mi)
நிர்வாகம்
இந்தியா
இந்திய ஒன்றியப் பகுதிஅந்தமான் நிக்கோபார் தீவுகள்
மாவட்டம்அந்தமான்
பெரிய குடியிருப்புரங்காட் (மக். 38,824)
மக்கள்
இனக்குழுக்கள்ஜாரவா

நடு அந்தமான் தீவு (Middle Andaman Island) இந்தியாவின் அந்தமான் தீவுகளின் நடுப் பகுதியில் உள்ள தீவு ஆகும். இதன் மொத்தப் பரப்பளவு 1,536 கிமீ². இங்கு வங்காளிகள், தமிழர், மலையாளி குடியேறிகள் உட்பட ஜாரவா பழங்குடி மக்களும் பெருமளவு வாழ்கின்றனர். வேளாண்மை, மற்றும் தோட்டப் பயிர்ச்செய்கை ஆகியன இத்தீவு மக்களின் முக்கிய தொழிலாகும்.

நடு அந்தமான் தீவு வடக்கு அந்தமான் தீவை ஆஸ்டென் நீரிணை பிரிக்கின்றது. தெற்கே பரட்டாங்கு தீவை ஹாம்பிரேய்சின் நீரிணை பிரிக்கின்றது. இவ்விரண்டு நீரிணைகளும் குறுகிய, ஆழம் குறைந்த கால்வாய்கள் ஆகும். மேற்கே இன்டர்வியூ தீவை இன்டர்வியூ கால்வாய் பிரிக்கின்றது.[1]

இத்தீவின் கரையோரப் பகுதி 2004 ஆழிப்பேரலையின் போது சேதத்திற்குள்லானது, ஆனாலும் அந்தமான் தீவுகளின் ஏனைய தீவுகளுடன் ஒப்பிடும் போது சேதங்கள் இங்கு குறைவே.

நடு அந்தமானின் முக்கிய நகரங்கள் ரங்காட், பில்லிகிரவுன்ட், கடம்தாலா, பக்குல்டாட்டா, பேதாப்பூர் ஆகியனவாகும். வடக்கு நகர் மாயாபந்தர் நடு அந்தமானில் இருந்தாலும், வடக்கு அந்தமான் தீவினால் நிருவகிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Edgar Thorpe, Showick Thorpe (2011) The Pearson CSAT Manual 2011. Accessed on 2012-07-26


"https://ta.wikipedia.org/w/index.php?title=நடு_அந்தமான்_தீவு&oldid=1886076" இலிருந்து மீள்விக்கப்பட்டது