நடுங்கும் மரம்
[1]

வகைப்பாடு[தொகு]
நடுங்கும் மரம் | |
---|---|
![]() | |
Quaking aspen grove in Lamoille Canyon, Nevada, U.S. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Angiosperms |
தரப்படுத்தப்படாத: | Eudicots |
தரப்படுத்தப்படாத: | Rosids |
வரிசை: | Malpighiales |
குடும்பம்: | Salicaceae |
பேரினம்: | Populus |
பிரிவு: | Populus |
இனம்: | 'பாப்புலஸ் ரெமுலஸ்' |
இருசொற் பெயரீடு | |
Populus tremuloides Michx. | |
![]() |
தாவரவியல் பெயர் : பாப்புலஸ் ரெமுலஸ் Populus Tremulodies
குடும்பம் : சாலிக்கேசியீ (Salicaceae)
இதரப் பெயர்கள்[தொகு]
- பாப்பளர்
- ஆஸ்ப்பெண்
மரத்தின் அமைவு[தொகு]
இம்மரம் 80 முதல் 100 அடி உயரம் (25-30மீ) வரை வளரக் கூடியது. ஈரமான இடங்களில் மிக வேகமாக நன்றாக வளரக்கூடியது. இவற்றின் பூக்கள் ஒரு பாலின, ஆண் மரம் வேறு, பெண் மரம் வேறு. மகரந்தச் சேர்க்கை காற்றின் மூலம் நடக்கும். விதைகள் சிறியவை பஞ்சு போன்ற மயிர்கள் குஞ்சமாக வளர்ந்திருக்கும்.
இலை அமைவு[தொகு]
இம்மரத்தின் இலைகள் மெல்லிய கிளைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் இலைகள் முக்கோண வடிவமாகவோ (அ) முட்டை வடிவமாகவோ இருக்கும். இதனுடைய பச்சையான இலைகள் இலையுதிர்க் காலத்தில் மஞ்சள் நிறமாக மாறும். காற்று லேசாக வீசினாலும் இவ்விலைகள் நடுங்குவது போல விடவிட என்று அசையும். மழைத்துளி விழுவது போன்ற சிறிய மென்காற்றுக்கும் இதன் இலைகள் அசைந்தாடும். இதனால் இம்மரம் பூமி அதிர்ச்சியை முன் கூட்டியே தெரிந்துகொள்ளும்.
காணப்படும் பகுதி[தொகு]
இம்மரம் வெண்மையாகவும் மென்மையாகவும் இருக்கும் இவை பெட்டியும், காகிதம் செய்யவும் பயன்படுகிறது. இம்மரங்கள் வட அமெரிக்கா, கலிபோர்னியாவில் வளர்கின்றன.
மேற்கோள்[தொகு]
[3] | 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001