நடால்யா சும்ஸ்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடால்யா சும்ஸ்கா
பிறப்புНаталя Сумська
ஏப்ரல் 22, 1956 (1956-04-22) (அகவை 67)
கீவ் மாகாணம், உக்ரைன் சோவியத் சோசலிசக் குடியரசு
தேசியம்உக்ரைனியர்
படித்த கல்வி நிறுவனங்கள்கீவ் நேசனல் ஐ.கே. கார்பென்கோ-கேரி நாடகம், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பல்கலைக்கழகம்
பிள்ளைகள்2
உறவினர்கள்நடால்யா சும்ஸ்கா (சகோதரி)
விருதுகள்
  • உக்ரைன் மக்கள் கலைஞர் (2000)
  • செவ்சென்கோ தேசிய பரிசு (2008)

நடால்யா வியாசஸ்லாவிவ்னா சும்ஸ்கா (Natalya Vyacheslavivna Sumska, உக்ரைனியன்: Наталя В'ячеславівна Сумська; பிறப்பு ஏப்ரல் 22, 1956) என்பவர் ஒரு உக்ரைன் நாடக, திரைப்பட நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆவார். இவர் உக்ரைன் மக்கள் கலைஞர் என்ற பட்டத்தை 2000 ஆண்டு பெற்றார். மேலும் செவ்சென்கோ தேசிய பரிசை 2008 இல் பெற்றார்.

வாழ்க்கை[தொகு]

சும்ஸ்கா 1956, ஏப்ரல், 22 அன்று உக்ரைன் சோவியத் சோசலிசக் குடியரசின் (தற்போதய உக்ரைன்) கீவ் மாகாணத்தின் கத்யுஜங்கா என்னும் சிற்றூரில் பிறந்தார்.[1] இவரது தந்தை வியாசஸ்லாவ் சும்ஸ்கி, தாய் ஹன்னா ஓபனாசென்கோ-சும்ஸ்கா ஆகியோராவர். இவரின் பெற்றோர் இருவரும் இவான் பிராங்கோ நேஷனல் அகாடமிக் டிராமா தியேட்டரில் நாடக நடிகர்களாக இருந்தனர். அவர்கள் முறையே உக்ரைனின் மக்கள் கலைஞர் மற்றும் உக்ரைனின் மெரிட்டட் ஆர்ட்டிஸ்ட் என்ற பட்டங்களைப் பெற்றவர்களாக இருந்தனர்.[2] இவர் தன் 10 வயது வரை லிவிவ் நகரில் வாழ்ந்தார்.[3] மரியா ஜான்கோவெட்ஸ்கா தியேட்டரில் நெவில்னிக் (உக்ரைனியன்: Невільник) என்ற நாடகத்தின் ஒத்திகைக்காக ஆறு வயதில் இவர் தனது முதல் நடிப்பு பாத்திரத்தை பெற்றார்.[3] இவர் 1977 இல் கீவ் நேஷனல் ஐ.கே. கார்பென்கோ-கேரி நாடகம், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[1] 1977 முதல், இவர் இவான் பிராங்கோ நேஷனல் அகாடமிக் டிராமா தியேட்டரில் நடிகையாக இருந்து வந்தார்.[3]

2000 ஆம் ஆண்டில் இவர் தேசிய நாடக விருதான "கீவ் பெக்டோரல்" (தி செக்கோவில் மாஷாவின் பாத்திரத்திற்காக மூன்று சகோதரிகள்) என்ற விருதைப் பெற்றார்.[4]

2003 முதல் இன்டர் தொலைக்காட்சி அலைவரிசையில் பணிசெய்துவருகிறார். அங்கு இவர் ஒரு பேச்சு நிகழ்ச்சியான கீ மூமண்ட் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இது 2010 இல் இன்டர் நிறுவனத்தால் நிறுத்தப்பட்டது.[5]

2008 ஆம் ஆண்டில், சும்ஸ்கா ஷெவ்செங்கோ தேசியப் பரிசைப் பெற்றார், மேலும் இந்த ஆண்டின் கெய்வன் என்று அழைக்கபட்டார்.

"பென்யுக் அண்ட் ஹோஸ்டிகோயேவ்" என்ற நாடக நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார்.

இவர் உக்ரைனின் தாராஸ் ஷெவ்செங்கோ தேசிய பரிசுக் குழுவின் உறுப்பினராக (திசம்பர் 2016 முதல்) உள்ளார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

நடால்யா சும்ஸ்காவுக்கு ஓல்ஹா என்ற ஒரு தங்கை இருக்கிறார், அவரும் ஒரு நடிகை ஆவார்.[2] ஒளிப்பதிவாளர் இகோர் மாமாய் உடனான இவரின் முதல் திருமணத்தின் வழியாக இவருக்கு டாரினா மாமாய்-சும்ஸ்கா என்ற மகள் உள்ளார்.[2] இவருக்கு வியாசஸ்லாவ் கோஸ்டிகோயேவ் என்ற மகனும் உள்ளார்.[2]

நடால்யா சும்ஸ்கா நாடக நடிகர் அனடோலி கோஸ்டிகோயீவை மணந்தார், அவருடன் இவர் நாடகங்களில் நடிக்கிறார்.[2]

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

2000 ஆம் ஆண்டில், சும்ஸ்கா உக்ரைன் மக்கள் கலைஞர் என்ற பட்டத்தைப் பெற்றார்.[7] 2008 இல், இவர் மிக்கிஸ் அண்டு மென் என்ற நாடகத்தில் நடித்ததற்காக ஷெவ்செங்கோ தேசிய பரிசைப் பெற்றார்.[7][2] இவர் 2000, 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் மூன்று கீவ் பெக்டோரல் விருதுகளைப் பெற்றார்.[7] ஜோர்டா தி கிரீக் நாடகத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான 2011 கீவ் பெக்டோரல் விருதைப் பெற்றார்.[8][9] 2020 ஆம் ஆண்டில், 2020 ஆம் ஆண்டில், சோர்னி வோரோன் (உக்ரைனியன்: Чорний ворон) நாடகத்தில் அதிர்ஷ்டக் குறியைச் சொல்லும் யவ்டோகாவாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான கோல்டன் டிஜிகா விருதைப் பெற்றார்.[10][2] 2016, 2020 ஆண்டுகளில் இல், இவர் முறையே மூன்றாம் மற்றும் இரண்டாம் நிலை ஆர்டர் ஆஃப் மெரிட் பரிசைப் பெற்றார்.[11][12]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Наталія Сумська: «Моє життя - гра»". CITY LiFE (in உக்ரைனியன்). March 2007. Archived from the original on October 17, 2013.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Наталії Сумській – 65: фото і цікаві факти з життя народної артистки України". ТСН (in உக்ரைனியன்). April 22, 2021. Archived from the original on May 12, 2022. பார்க்கப்பட்ட நாள் March 31, 2023.
  3. 3.0 3.1 3.2 Kochkyna, Maryna (April 22, 2020). "Наталії Сумській сьогодні 64". Погляд (in உக்ரைனியன்). Archived from the original on April 26, 2022. பார்க்கப்பட்ட நாள் March 31, 2023.
  4. "Телекрикита". Telekritika (in ரஷியன்). 2020-11-26. பார்க்கப்பட்ட நாள் 2024-01-22.
  5. Nataliya Sumska: "Inter" has disbanded the "Key moment" as a typical father that forgot about his child.
  6. "УКАЗ ПРЕЗИДЕНТА УКРАЇНИ №575/2016". Офіційне інтернет-представництво Президента України (in உக்ரைனியன்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-14.
  7. 7.0 7.1 7.2 "«Реакція та любов глядача – це джерело енергії, необхідної для життя» − Наталія Сумська". ТСН (in உக்ரைனியன்). October 28, 2021. Archived from the original on April 13, 2022. பார்க்கப்பட்ட நாள் March 31, 2023.
  8. "Сумська та Хостікоєв отримали «Київську Пектораль»". Тиждень (in உக்ரைனியன்). March 29, 2011. Archived from the original on March 31, 2023. பார்க்கப்பட்ட நாள் March 31, 2023.
  9. Ovcharenko, Eduard (February 3, 2021). "Відчуття внутрішньої свободи". I-UA.tv. (in உக்ரைனியன்). Archived from the original on December 8, 2022. பார்க்கப்பட்ட நாள் March 31, 2023.
  10. "Золота Дзиґа 2020: стали відомі переможці «українського Оскара»" (in uk). May 3, 2020 இம் மூலத்தில் இருந்து March 27, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230327112314/https://www.radiosvoboda.org/a/news-zolota-dzyga-2020/30590562.html. 
  11. "УКАЗ ПРЕЗИДЕНТА УКРАЇНИ №117/2016". ПРЕЗИДЕНТ УКРАЇНИ (in உக்ரைனியன்). March 26, 2016. Archived from the original on March 31, 2023. பார்க்கப்பட்ட நாள் March 31, 2023.
  12. "УКАЗ ПРЕЗИДЕНТА УКРАЇНИ №335/2020". ПРЕЗИДЕНТ УКРАЇНИ (in உக்ரைனியன்). August 21, 2020. Archived from the original on March 31, 2023. பார்க்கப்பட்ட நாள் March 31, 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடால்யா_சும்ஸ்கா&oldid=3917764" இலிருந்து மீள்விக்கப்பட்டது