நடாலியா பொலோன்ஸ்கா-வாசிலென்கோ
நடாலியா பொலோன்ஸ்கா-வாசிலென்கோ | |
---|---|
Наталія Полонська-Василенко | |
1902 இல் கோஸ்லோவ்ஸ்கி மற்றும் ஹாஸ் மூலம் உருவாக்கபட்ட நடாலியா பொலோன்ஸ்கா-வாசிலென்கோவின் படம். | |
தாய்மொழியில் பெயர் | Наталія Полонська-Василенко |
பிறப்பு | கார்கீவ், கார்கோவ் கவர்னரேட், உருசியப் பேரரசு | 12 பெப்ரவரி 1884
இறப்பு | சூன் 8, 1973 டோர்ன்ஸ்டாட், மேற்கு செருமனி | (அகவை 89)
பெற்றோர் | டிமிட்ரோ மென்ஷோவ் |
வாழ்க்கைத் துணை | மைகோலா வாசிலென்கோ |
கல்விப் பின்னணி | |
கல்வி நிலையம் | கீவ் பல்கலைக்கழகம் |
கல்விப் பணி | |
துறை | உக்ரைனின் வரலாறு |
கல்வி நிலையங்கள் | கீவ் பல்கலைக்கழகம் உக்ரைன் இலவச பல்கலைக்கழகம் |
நடாலியா பொலோன்ஸ்கா-வாசிலென்கோ (Nataliia Polonska-Vasylenko, உக்ரைனியன்: Наталія Полонська-Василенко; 31 February [ஓ. எஸ். 12 பிப்ரவரி] 1884[1] - 8 சூன் 1973) என்பவர் 20 ஆம் நூற்றாண்டின் முதன்மையான உக்ரேனிய வரலாற்றாசிரியர்களில் ஒருவர். இவர் உக்ரேனிய வரலாற்றக் கல்வியாளரும் அரசியல்வாதியுமான மைகோலா வாசிலென்கோவின் மனைவி ஆவார்.
வாழ்க்கையும் தொழிலும்
[தொகு]பொலோன்ஸ்கா-வாசிலென்கோ தன் தாயார் மரியா ஃபியோடோரோவ்னா வழியாக உருசிய பிரபுக்கள் மரபைச் சேர்ந்தவர். அவர் ஓரியோல் மாகாணத்தைச் சேர்ந்தவர்.[2] இவரது தந்தை உருசிய பேரரசின் அதிகாரியான, டிமிட்ரோ மென்ஷோவ் (1855–1918) என்பவர் ஆவார்.[2] பொலோன்ஸ்கா-வாசிலென்கோ கீவ் பல்கலைக்கழகத்தில் மிட்ரோஃபான் டோவ்னர்-ஜபோல்ஸ்கியின் கீழ் வரலாற்றைப் பயின்றார். மேலும் 1912 முதல் கீவை- அடிப்படையாக கொண்ட இஸ்டாரிகல் சொசைட்டி ஆஃப் நெஸ்டர் தி கிரோனிக்லரில் உறுப்பினராக இருந்தார்.[3] 1916 முதல், இவர் கீவ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், அதன் தொல்லியல் அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும் இருந்தார்.[4] மேலும் டாரிடா அறிவியல் ஆவணக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.[5] 1920 களில், சோவியத் ஆட்சியின் மிகவும் தாராளவாத ஆண்டுகளில், இவர் புவியியல், தொல்லியல் மற்றும் கலை நிறுவனத்தில் பேராசிரியராகவும், அனைத்து உக்ரேனிய அறிவியல் அகாதமியில் ஆராய்ச்சி கூட்டாளராகவும் இருந்தார். ஜோசப் ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் 1930 களில் தூய்மைப்படுத்தல்கள் என்ற பெயரிலான ஒடுக்குமுறைகளுக்கு சாட்சியாக இருந்தார். ஆனால் அதில் இருந்து தப்பிப் பிழைத்தார். மேலும் 1937 முதல் 1941 வரை மறுசீரமைக்கப்பட்டு, சோவியமயமாக்கப்பட்ட அகாதமியில் உறுப்பினராக இருந்தார். 1940 ஆம் ஆண்டில், இவர் முனைவர் பட்டம் பெற்றார். மேலும் கீவ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார். செருமானிய ஆக்கிரமிப்பின் போது, இவர் கீவ் மத்திய ஆவணக்காப்பகத்தை வழிநடத்தினார். மேலும் கீவ் நகர நிர்வாகத்திலும் பணிபுரிந்தார். தெருக்களின் பெயர்களை மாற்றும் பணிக்கு பொறுப்பேற்றார். மேலும் கீவ் நிலைமாறுகால ஆவணக் காப்பக அருங்காட்சியகத்தின் (செருமானிய ஆக்கிரமிப்பின் சாதனைகள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் குற்றங்கள் குறித்து உருவாக்கபட்டது) பொறுப்பை ஏற்றார். போரின் அலை செருமானியர்களுக்கு எதிராக திரும்பியதால், இவர் மேற்கு நோக்கி முதலில் லிவீவ், பின்னர் பிராகா, இறுதியாக பவேரியா என தப்பி ஓடினார். இவர் பிராகாவில் (1944-45) இருந்த உக்ரைனியன் இலவச பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். மேலும் இந்த கல்வி நிறுவனத்துடன் சேர்ந்து முனிச்சிற்கு சென்றார். அங்கு இவர் 1973 இல் இறக்கும் வரை தொடர்ந்து கற்பித்தார். 1960 களில், அமெரிக்க அடிப்படையிலான உக்ரேனிய வரலாற்று சங்கத்தை நிறுவுவதி தீவிரமாக பணியாற்றினார். மேலும் 1965 முதல் அதன் துணைத் தலைவராக இருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Пилипчик, Я. І. (23 November 2020). "Наталя Полонська-Василенко: становлення особистості нової генерації" (in uk). Вісник студентського наукового товариства ДонНУ імені Василя Стуса 2 (12): 96–99. https://jvestnik-sss.donnu.edu.ua/article/view/9241. பார்த்த நாள்: 11 March 2024.
- ↑ 2.0 2.1 Школяк, Божена (20 July 2022). "Божена Школяк. Життєвий шлях Наталії Полонської – Василенко" (in uk). Грінченко – Сетон міжнародний журнал молодих науковців 4 (4): 87–92. https://www.ysgsij.kubg.edu.ua/index.php/journal/article/view/134. பார்த்த நாள்: 11 March 2024.
- ↑ "Polonska-Vasylenko, Nataliia". www.encyclopediaofukraine.com. பார்க்கப்பட்ட நாள் 11 March 2024.
- ↑ Noviychuk, Valentyna (2010). "Листи Наталії Полонської-Василенко до Серафими Яворницької" (in uk-ua). Народна творчість та етнологія (4): 76. https://nte.etnolog.org.ua/arkhiv-zhurnalu/2010-rik/4/2144-rozvidky-ta-polovi-materialy/4134-lysty-natalii-polonskoi-vasylenko-do-serafymy-yavornytskoi. பார்த்த நாள்: 11 March 2024.
- ↑ Verba, Igor (2015). "Південна Україна і Запоріжжя в археографічній діяльності Наталії Полонської-Василенко - Ігор Верба - Тека авторів". Емінак: Науковий щоквартальник. 10 (1–2): 68. https://chtyvo.org.ua/authors/Verba_Ihor/Pivdenna_Ukraina_i_Zaporizhzhia_v_arkheohrafichnii_diialnosti_Natalii_Polonskoi-Vasylenko/. பார்த்த நாள்: 11 March 2024.