நகரும் சல்லடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நகரும் சல்லடை (Traveling screen) என்பது ஒரு வகையான தண்ணீர் வடிகட்டும் கருவியாகும்[1] .சிதைவுக் கூளத்தைப் பிடிக்க அல்லது நீக்க இக்கருவியில் தொடர்ச்சியாக இயங்கும் ஒரு வலைக்கண்ணி பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் மற்றும் கழிவு நீர்சுத்திகரிப்பு ஆலைகளில் தண்ணீரை உள்ளெடுக்கும் இயந்திரத் தொகுதிகளில் பொதுவாக இந்த நகரும் சல்லடை அமைப்பு உபயோகமாகிறது. மரபார்ந்த கழிவுநீர் சுத்திகரிப்புச் செயல்முறையில் சலித்தல் என்பது செயல்முறையின் முதல் படிநிலையாகும். நீரை உள்ளெடுக்கும் மின்நிலையங்களிலும் இத்தகைய சலிப்பு பயன்படுகிறது. நகரும் சல்லடையின் உதவியால் இலைகள், குச்சிகள் , புல், சொறிமுட்டைகள், குப்பைகள், பச்சைச்சிப்பிகள், கூடுகள், பிளவினப்பெருக்க உயிரினங்கள், கடல்வாழ் களைகள் மற்றும் நெகிழிகள் ஆகியனவற்றை வடிகட்ட முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Whiting, Joanne E. Drinan ; associate editor, Nancy E. (2000). Water and Wastewater Treatment a Guide for the Nonengineering Professionals. Hoboken: CRC Press. p. 336. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781420031799. {{cite book}}: |first1= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  • Ronald L. Droste. 1997. Theory and Practice of Water and Wastewater Treatment. John Wiley & Sons, Inc.: New York.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகரும்_சல்லடை&oldid=1883319" இலிருந்து மீள்விக்கப்பட்டது