த ஹாண்ட்மெய்ட்ஸ் டேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த ஹாண்ட்மெய்ட்ஸ் டேல்
The Handmaid's Tale
நூலாசிரியர்மார்கரெட் அட்வுட்
அட்டைப்பட ஓவியர்டேட் அரோன்விச்,[1] வடிவமைப்பு; கெயில் கில்ட்னிர், அட்டைப்படம் (முதல் பதிப்பு கடின அட்டை)
நாடுகனடா
மொழிஆங்கிலம்
வகைடிஸ்டோபியன் நாவல், அறிவியல் புனைவு, ஊகப்புனைவு
வெளியீட்டாளர்ம்க்லேல்லாந்து மற்றும் ஸ்டீவர்ட்
வெளியிடப்பட்ட நாள்
1985 (கெட்டி அட்டை)
ISBN0-7710-0813-9

பணிப்பெண்ணின் கதை (த ஹேண்ட் மெய்ட்ஸ் டெல்) (The Handmaid's Tale (1985) என்பது ஒரு ஊகப்புனைவு[2] ஆகும். இதை எழுதியவர் கனடா நாட்டு எழுத்தாளரான மார்கரெட் அட்வுட்.[3][4] கதையின் முதன்மைக் கருவாக அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் அரசியல் சாசனம், நாடாளுமன்றம் ஆகியவை இல்லாத மத அடிப்படைவாத சமயசார்பாட்சி நடப்பதாகவும், சுற்றுச் சூழல் மாசால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வரும் சூழலில், ஆளுநர்கள் கர்ப்பம் தரிக்கக்கூடிய ஆரோக்கியமானப் பெண்களைப் பணிப்பெண்களாக வைத்துக் கொண்டு அவர்களைப் பிள்ளை பெறும் கருவியாக மட்டுமே பயன்படுத்துவதாகக் கதை தொடர்கிறது.[5]

இந்த நூல் 1985 இல் கவர்னர் ஜெனரல் விருது மற்றும் முதல் ஆர்தர் சி கிளார்க் விருதை 1987 இலும் பெற்றது. 1986 ஆம் ஆண்டு நெபுலா விருதுக்கும், 1986 ஆண்டு புக்கர் பரிசுக்கும், 1987 ஆம் ஆண்டு பிரமீதீயஸ் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் இந்தப் புதினம் திரைப்படம், வானொலி நாடகம், மேடை நாடகம் போன்ற பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1985 ஆம் ஆண்டில் வெளிவந்ததிலிருந்து தொடர்ந்து இக்கதை நூல் பல பதிப்புகளைக் கண்டு வருகிறது.

புதினத்தின் பின்னணி[தொகு]

புதினத்தை எழுதும் காலத்தில் மார்கரேட் ஆட்வுட் மேற்கு பெர்லினில் வசித்துவந்தார். பெர்லினைப் பிரிக்கும் விதமாக பெர்லின் சுவர் இருந்தது. சோவியத் ஒன்றியம் வலுவாக இருந்த சமயம். இரும்புத் திரைக்குப் பின்னால் இருந்த சில நாடுகளுக்கு மார்கரேட் செல்லும்போது இனம்புரியா பீதி இருந்ததையும் இரகசிய சமிக்ஞைகளுடன் இலக்கியவாதிகள் பேசுவதையும் கண்டிருக்கிறார். நிறுவனங்கள் அழிவதையும், பாரிய மாறுபாடுகளையும் சுட்டிக்காட்டுவார்கள். மின்னல்போல மாற்றம் வருவது சாத்தியம் என்று தோன்றும். இது நடக்கவே வாய்ப்பு இல்லை என்று நினைப்பது பேதமை என்று தோன்றும். எது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நடக்கக்கூடும். இதையெல்லாம் பூடகமாகச் சொல்ல வேண்டும்.

பின்பு கனடாவில் வசித்த அவர் , ரொனால்ட் ரீகன் இரண்டாம் முறையாக வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பதவியேற்றவுடன், அதுவரை லிபரல் ஜனநாயகமாக இருந்த அமெரிக்கா யதேச்சாதிகார இறைமை ஆட்சிக்குத் தள்ளப்பட்டதாக உணர்ந்தார் அதைச் சொல்லவும் துணிந்தார். தனது உணர்வு மிகையானதோ என்று அவரே நினைத்தார். படிப்பவரை எப்படி நம்பவைப்பது? அது ஒரு மிகு கற்பனை என்று அவர்கள் நினைக்கக் கூடாது என்று மார்கரேட் விரும்பி, 17-ம் நூற்றாண்டு காலத்திய மத அடிப்படைவாத ஆடசிக்காலத்தில் கதை நடப்பதாக எழுதினார். இலக்கிய உலகத்தில் பெரிய சலனத்தை ஏற்படுத்தி, பாராட்டைப் பெற்ற புதினமாக இது விளங்குகிறது.[6]

கதைச் சுருக்கம்[தொகு]

இப்புதினத்தின் கதைக்களம், அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உள்ள மாஸசூஸட்ஸ் மாநிலத்தின் கேம்ப்ரிட்ஜ் நகரம். ஜில்லியட் குடியரசில் அரசியல் சாசனமும் பாராளுமன்றமும் இல்லாத 17 ஆம் நூற்றாண்டு பியூரிட்டன் மத அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி நிலவுகிறது. ஜில்லியட் குடியரசின் இரகசியக் கண்காணிப்புப் பணி பல்கலைக்கழக நூலகத்திலேயே செயல்படுகிறது. தவறு செய்தவர்களின் தூக்கிலிடப்பட்ட உடல்கள் அந்தச் சுவர்களில் தொங்கும். சுற்றுச் சூழலில் இருக்கும் நச்சுத்தன்மையால் மக்கள் தொகை சுருங்கிவருகிறது. இதனால் ஜில்லியட் குடியரசின் ஆளுநர்கள் கரு தரிக்கக்கூடிய ஆரோக்கியமான பெண்களைத் தங்களின் பணிப்பெண்களாக வைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் குழந்தை பெற்றுத் தர வேண்டும். ஆனால் சொந்தம் கொண்டாட முடியாது. அவர்களுடைய உடை சிவப்பு. இரத்தத்தை அடையாளப்படுத்தாகவும், தப்பிக்க நினைத்தால் எளிதில் அடையாளப்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். அதேசமயம் மனைவிகளின் உடை தூய நீலநிறம். கதையின் நாயகியின் பெயர் ஆஃப்ரெட். அவள்தான் தனது அனுபவங்களைப் பதிவுசெய்கிறாள். அவள் எழுதிவைத்த குறிப்பு பின்னால் ஒரு பல்கலைக்கழகக் கருத்தரங்கில் வாசிக்கப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cosstick, Ruth (January 1986). "Book review: The Handmaids Tale". Vol. 14, no. 1. CM Archive. Archived from the original on 2016-09-18. பார்க்கப்பட்ட நாள் 2016-06-26. Tad Aronowicz's jaggedly surrealistic cover design is most appropriate. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  2. "The Handmaid's Tale Study Guide: About Speculative Fiction". Gradesaver. 22 May 2009.
  3. Margaret Atwood (17 June 2005). "Aliens have taken the place of angels". The Guardian (UK). https://www.theguardian.com/film/2005/jun/17/sciencefictionfantasyandhorror.margaretatwood. "If you're writing about the future and you aren't doing forecast journalism, you'll probably be writing something people will call either science fiction or speculative fiction. I like to make a distinction between science fiction proper and speculative fiction. For me, the science fiction label belongs on books with things in them that we can't yet do, such as going through a wormhole in space to another universe; and speculative fiction means a work that employs the means already to hand, such as DNA identification and credit cards, and that takes place on Planet Earth. But the terms are fluid. Some use speculative fiction as an umbrella covering science fiction and all its hyphenated forms–science fiction fantasy, and so forth–and others choose the reverse.... I have written two works of science fiction or, if you prefer, speculative fiction: The Handmaid's Tale and Oryx and Crake. Here are some of the things these kinds of narratives can do that socially realistic novels cannot do." 
  4. Langford 2003.
  5. Kantor, Elizabeth (2006). "2. Medieval Literature: Here Is God's Plenty". The Politically Incorrect Guide to English and American Literature. Washington, D.C.: Regnery. pp. 27–44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59698-011-7. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
  6. "ஒரு தீர்க்கதரிசனக் கதை". கட்டுரை. தி இந்து. 9 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_ஹாண்ட்மெய்ட்ஸ்_டேல்&oldid=3849780" இலிருந்து மீள்விக்கப்பட்டது