நெபுலா விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெபுலா விருது
வழங்கியவர்முந்தைய ஆண்டின் மிகச்சிறந்த அறிவியல் புனைவு அல்லது கனவுருப்புனைவுப் படைப்புகளுக்கு
வழங்கியவர்அமெரிக்க அறிவியல் புனைவு மற்றும் கனவுருப்புனைவு எழுத்தாளர் சங்கம்
முதலில் வழங்கப்பட்டது1966
இணையதளம்sfwa.org/nebula-awards/

"நெபுலா விருதுகள்" (Nebula Award), ஆண்டுதோறும் ஐக்கிய அமெரிக்காவில் பதிப்பிக்கப்பெறும் அறிவியல் புனைவு மற்றும் கனவுருப் புனைவுப் படைப்புகளில் மிகச்சிறந்த படைப்புகளுக்கு வழங்கப்படும் விருதாகும். இவ்விருதுகள், இலாபநோக்கற்ற தொழில்சார் அறிவியல் புனைவு மற்றும் கனவுருப்புனைவு எழுத்தாளர்களின் சங்கமான "அமெரிக்க அறிவியல் புனைவு மற்றும் கனவுருப்புனைவு எழுத்தாளர் சங்கத்தால்" அமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.  1966-ஆம் ஆண்டில் முதன்முதலில் இவ்விருதுகளுக்கென பிரத்யேகமாக அமைக்கப்பெற்ற விழாவில், படைப்பின் நீளத்தைப் பொறுத்து நான்கு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பெற்றன.1974-78 மற்றும் 2000-09 காலப்பகுதிகளில் திரை மற்றும் தொலைக்காட்சி  தொடர்களின்  எழுத்தவடிவங்களுக்கும்  ஐந்தாவது பிரிவாக விருதுகள் வழங்கப்பெற்றன.  நெபுலா விருதுகள் வழங்குவதற்கான விதிமுறைகள் பலமுறை மாற்றப்பட்டிருக்கின்றன; 2010-ஆம்  ஆண்டில்  மிக  அண்மையான  விதிமுறைகள்  புனரமைப்பு நிகழ்ந்தது.

"அமெரிக்க அறிவியல் புனைவுப் படைப்புகளுக்கு வழங்கப்பெறும் மிக முக்கியமான விருதாக" நெபுலா விருதுகள் கருதப்படுகின்றன.[1] விருதுபெறும் படைப்புகளின்  பதிப்புகளில், நெபுலா விருது பெற்றமை முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறது.  ஒவ்வோராண்டும், அதற்கு முந்தைய ஆண்டில் வெளியிடப்பட்ட படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

விருதுகள் வழங்கப்படும் பிரிவுகள்[தொகு]

பிரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்டுகள் விவரம்
புதினம் 1966–இன்றுவரை 40,000 சொற்களுக்கும் மேலானவை
குறுநாவல் 1966–இன்றுவரை 17,500-க்கும் 40,000-க்கும் இடைப்பட்ட சொற்கள் எண்ணிக்கை
சிறுநாவல் 1966–இன்றுவரை 7,500-க்கும் 17,500-க்கும் இடைப்பட்ட சொற்களின் எண்ணிக்கை
சிறுகதை 1966–இன்றுவரை 7,500 சொற்களுக்கும் குறைவானது
திரைக்கதை 1974–1978, 2000–2009 திரைப்படம், தொலைக்காட்சி தொடருக்கான திரைக்கதை

உசாத்துணைகள்[தொகு]

  1. Flood, Allison (2009-04-28). "Ursula K Le Guin wins sixth Nebula award". The Guardian. 2009-08-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-12 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி); Invalid |deadurl=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெபுலா_விருது&oldid=3287678" இருந்து மீள்விக்கப்பட்டது