த பேரண்ட் ட்ராப் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The Parent Trap
இயக்கம்நான்சி மேயேர்சு
தயாரிப்புசார்லசு சியர்
திரைக்கதைDavid Swift
Nancy Meyers
Charles Shyer
இசைஆலன் சில்வெஸ்டரி
நடிப்பு
ஒளிப்பதிவுடீன் கன்டே
படத்தொகுப்புStephen A. Rotter
கலையகம்வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 29, 1998 (1998-07-29) (ஐக்கிய அமெரிக்கா)
திசம்பர் 11, 1998 (1998-12-11) (ஐக்கிய இராச்சியம்)
ஓட்டம்128 நிமிடங்கள்
நாடுஐக்கிய இராச்சியம்
ஐக்கிய அமெரிக்கா
மொழிEnglish

த பேரண்ட் ட்ராப் (The Parent Trap) என்பது 1961 ஆம் ஆண்டு வெளியாகிய ஆங்கிலத் திரைப்படம் ஆகும்.

திரைப்பட உருவாக்கம்[தொகு]

த பேரண்ட் ட்ராப் (1961)

எரிக் காஸ்னர் என்ற எழுத்தாளர் எழுதிய ‘லோட்டி & லிசா’ என்ற நாவலை உரிமை வாங்கி, ‘டேவிட் ஸ்விப்ட்’ என்பவர் திரைக்கதை அமைத்து இப்படத்தை வெளியிட்டார். இத்திரைப்படம் பெற்ற வெற்றியால், வால்ட் டிஸ்னி நிறுவனம் இத்திரைப்படத்தை 1998 ஆம் ஆண்டில் மீண்டும் தயாரித்து வெளியிட்டது. இப்படத்திற்கு திரைக்கதை எழுதிய இயக்குனர் நான்சி மேயர், இணைந்து பணியாற்றிய சார்லஸ் சையர் ஆகியோர் பெயரோடு, 1961-ஆம் ஆண்டில் வெளியான திரைப்படத்துக்கு திரைக்கதையமைத்த ‘டேவிட் ஸ்விப்ட்’ பெயரையும் இணைத்து டைட்டிலில் இடம் பெறச் செய்து பெருமை சேர்த்தனர். த பேரண்ட் ட்ராப் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி புகழ் பெற்ற லிண்ட்சே லோகன் இப்போது புகழ் பெற்ற நட்சத்திரமாகவும், பாடகியாகவும் திகழ்கிறார்.இத்திரைப்படத்தை குழந்தையும் தெய்வமும் என்ற புயரில் ஏவிம் நிறுவனம் தயாரித்து வழங்கியது.

திரைக்கதை சுருக்கம்[தொகு]

திருமணமாகி இரட்டைக் குழந்தைகளை பெற்றபின் ஒரு தம்பதியரின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை இப்படம் விளக்குகிறது. இரட்டைக் குழந்தைகள் பிறந்தவுடன் விவாகரத்து வாங்கும் இத்தம்பதியினர் குழந்தைகளையும் பிரித்து சென்று விடுகின்றனர். பள்ளிப்பருவத்தில் நடக்கும் ஒரு வாள் சண்டையில் அக்குழந்தகள் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். இருவரும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருப்பதை எண்ணி ஆச்சர்யமடைகின்றனர். தங்களுடைய பிறந்த தேதியும் ஒரே நாளில் தான் என்பதையும் தெரிந்த பின் தாங்கள் இரட்டைக் குழந்தைகள் என்பது புரிகிறது. அதற்குப் பின் அவர்கள் எவ்வாறு தங்கள் பெற்றோரை ஒன்று சேர்த்தனர் என்பதை இப்படம் விளக்குகிறது.