தோரணமலை

ஆள்கூறுகள்: 8°51′53″N 77°19′34″E / 8.8646°N 77.3261°E / 8.8646; 77.3261
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோரணமலை
Thoranamalai
உயர்ந்த இடம்
உயரம்432 m (1,417 அடி)
ஆள்கூறு8°51′53″N 77°19′34″E / 8.8646°N 77.3261°E / 8.8646; 77.3261
பெயரிடுதல்
பெயரின் மொழிதமிழ்
புவியியல்
அமைவிடம்கடையம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
மூலத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்அகத்திய முனிவர்
எளிய அணுகு வழிதென்காசியிலிருந்து கடையம் நோக்கி செல்லும் வழி

தோரணமலை (ஆங்கில மொழி: Thoranamalai) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் புறநகர்ப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு மலை மற்றும் அதனைச் சார்ந்துள்ள பகுதியாகும்.[1] தென்காசி புறநகர்ப் பகுதியிலிருந்து, கடையம் நோக்கி செல்லும் வழியில் தோரணமலை அமைந்துள்ளது.[2] படுத்திருக்கும் யானை (வாரணம்) போல் காட்சியளிப்பதால் இம்மலை, 'வாரணமலை' என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி 'தோரணமலை' என்று கூறப்படுகிறது.[3] அறுபத்து நான்கு சுனைகள் கொண்ட தோரணமலையில், அந்த சுனைகளின் நீராலேயே, அங்குள்ள முருகன் கோயிலின் மூலவர் அபிசேகம் நடைபெறுகிறது.[4]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 432 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தோரணமலையின் புவியியல் ஆள்கூறுகள் 8°51′53″N 77°19′34″E / 8.8646°N 77.3261°E / 8.8646; 77.3261 ஆகும்.

புராண காலத் தொடர்புடைய தோரணமலை, அகத்திய முனிவர் மற்றும் அவருடைய சீடர் தேரையர் ஆகியோர் வாழ்ந்த பகுதியாகும்.[5] மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகள் நிறைந்த பகுதியாகும் தோரணமலை. அகத்தியர் மற்றும் தேரையர் ஆகியோரால் முதல் மண்டை ஓடு அறுவை சிகிச்சை நடைபெற்ற இடம் தோரணமலை.[6]

கடையம் தோரண மலை முருகன் கோயில், தோரணமலையில் அமையப் பெற்று, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.[7] மூலவராக தோரணமலை முருகன் அருள்பாலிக்கும் இக்கோயிலில் இராம தீர்த்தம், ஜம்பு நதி தீர்த்தம் ஆகியவை புண்ணிய தீர்த்தங்களாகும்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. மாலை மலர் (2019-01-23). "தோரணமலை முருகன் கோவில் - திருநெல்வேலி". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.
  2. "வெற்றிவேல் முருகனுக்கு... 20 : துயரங்கள் போக்கும் தோரணமலை நாயகன்!". Hindu Tamil Thisai. 2018-02-12. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.
  3. தினத்தந்தி (2023-01-31). "அகத்தியர் வழிபட்ட தோரணமலை முருகன்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.
  4. "தொன்மை கதைகள் நிரம்பிய தோரணமலை முருகன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?". News18 Tamil. 2023-01-12. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.
  5. மு. ஹரி, காமராஜ் (2021-12-28). "தோரணமலை மகா ஸ்கந்த ஹோமம்: ஆயுளும் ஆரோக்கியமும் அருளும் இந்த யாகத்தில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள்!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.
  6. S. Esakki Raj (2022-12-23). "அகத்தியரால் உலகின் முதல் மண்டை அறுவை சிகிச்சை நடைபெற்ற தோரணமலை கோவில்". www.instanews.city. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.
  7. "Arulmigu Thoranamalai Murugan Temple, Kadaiyam Perumpathu, Kadaiyam Perumpathu - 627415, Tenkasi District [TM039499].,thornamalai kovil,subramaniyar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.
  8. "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-06.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரணமலை&oldid=3750374" இலிருந்து மீள்விக்கப்பட்டது