தோமோமி யாமகுச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோமோமி யாமகுச்சி (Tomomi Yamaguchi) சப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு மானுடவியலாளராவார். பெண்ணியம், மக்கள் கலாச்சாரம், தேசியவாதம் மற்றும் சமூக இயக்கங்கள் ஆகியவை இவரது சிறப்புப் பகுதிகளாகும். பாலினம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளில் இவர் அதிக கவனம் செலுத்துகிறார்.[1]

யாமகுச்சி 2004 ஆம் ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[2] மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் பட்டதாரிப் பயிற்சியின் போதும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பின் போதும் அடிபடையான மானுடவியல் ஆய்வுகளில் இவர் ஈடுபட்டார். மாண்டானா மாநிலப் பல்கலைக்கழகத்தில் இவர் மானுடவியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.[3][4] இங்கு இவரது ஆராய்ச்சிப் பாதை பழமைவாத இயக்கங்கள், வரலாற்று திருத்தல்வாதம், தேசியவாதம், இனவாதம், இனவெறி, மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற பிரிவுகளில் புதிய ஆய்வுகளில் பயணித்தது.

ஓர் ஆசிரியராக யாமகுச்சி அமெரிக்கா மற்றும் சப்பானில் உள்ள நிறுவனங்களில் மானுடவியல், சப்பான் ஆய்வுகள், பெண்கள் மற்றும் பாலின ஆய்வுகள் மற்றும் தகவல் தொடர்பு ஆய்வுகள் போன்ற படிப்புகளை கற்பித்திருக்கிறார்.

சப்பான் போகசு என்ற ஆசிய-பசிபிக் செய்தி இதழின் ஆசிரியராகவும் தோமோமி யாமகுச்சி உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tomomi Yamaguchi | U-M LSA National Center for Institutional Diversity". lsa.umich.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-16.
  2. ""The History Wars and the Comfort Woman," lecture by Tomomi Yamaguchi (Oct. 17, 2019) | Center for the Study of Asia". www.bu.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-16.
  3. "Tomomi Yamaguchi | Montana State University - Bozeman - Academia.edu". montana.academia.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-16.
  4. "Department of Sociology & Anthropology | Montana State University". socanth.msu.montana.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமோமி_யாமகுச்சி&oldid=3860753" இலிருந்து மீள்விக்கப்பட்டது