தோமசு தங்கத்துரை வில்லியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோமசு வில்லியம் தங்கத்துரை
Thomas Thangathurai William

நா.உ
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2010
முன்னவர் கே. பத்மநாதன், ததேகூ
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 13, 1944 (1944-02-13) (அகவை 79)
பாண்டிருப்பு, அம்பாறை மாவட்டம், இலங்கை
அரசியல் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

மரு. தோமசு தங்கத்துரை வில்லியம் (Dr Thomas Thangathurai William, பிறப்பு: 13 பெப்ரவரி 1944) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்[1] ஆவார்.

அம்பாறை மாவட்டம், பாண்டிருப்பைச் சேர்ந்த தோமசு தங்கத்துரை சமூக சேவையாளர் ஆவார்.[2] இவர் இலங்கையின் ஏப்ரல் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு 9,029 விருப்பு வாக்குகள் பெற்று ததேகூ வேட்பாளர்களில் மூன்றாவதாக வந்து தோல்வியடைந்தார்.[3] ஆனாலும் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதன் 2009 மே மாதத்தில் இறந்தததை அடுத்து வெற்றிடமான பதவிக்கு கட்சிப் பட்டியலில் இருந்து (இரண்டாவதாக வந்த அரியநாயகம் சந்திரநேரு ஏற்கனெவே இறந்தததினால்) தோமசு வில்லியம் 2009 சூன் மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.[4]

2010 தேர்தலில் இவர் போட்டியிட்டாராயினும், 8,256 விருப்பு வாக்குகள் பெற்று கூட்டமைப்பு வேட்பாளர்களில் மூன்றாவதாக வந்து தோல்வியடைந்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]