உள்ளடக்கத்துக்குச் செல்

தோக்கா மாணிக்க வரபிரசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோக்கா மாணிக்க வரபிரசாத்
ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
30மார்ச் 2017
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2004–2014
தொகுதிதாடிகொண்டா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 மார்ச்சு 1962 (1962-03-05) (அகவை 62)
புலிப்பாடு, குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
தேசியம்இந்திய
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி (2020- தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
வாழிடம்குண்டூர்
இணையத்தளம்[1]

தோக்கா மாணிக்க வரபிரசாத ராவ் (Dokka Manikya Vara Prasada Rao) (பிறப்பு 5 மார்ச் 1962) ஓர் இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேசத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும் ஆவார். சமீபத்தில் இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இவர் தாடிகொண்டா சட்டமன்றர்க் தொகுதியின் உறுப்பினராக (2009–2014) இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

தோக்கா தேவ பிக்சம் [1] மற்றும் லோலம்மா ஆகியோருக்கு 1962 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள புலிபாடு கிராமத்தில் பிறந்தார். தனது உயர்நிலை கல்விக்குப் பிறகு இளம் அறிவியல் பட்டம் பெற்றார். குண்டூரில் உள்ள ஆந்திரா கிறித்துவ சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டம் பயின்றார். ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் முதுலை சட்டப் பட்டமும் பெற்றுள்ளார். உசுமானியா பல்கலைக்கழகத்தில் "மதச்சார்பின்மை மற்றும் இந்திய அரசியலமைப்பு" என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dokka Manikya Vara Prasada Rao(Indian National Congress(INC)):Constituency- TADIKONDA (SC)(GUNTUR) - Affidavit Information of Candidate:".