உள்ளடக்கத்துக்குச் செல்

தொல்லியல் அருங்காட்சியகம், சாஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்லியல் அருங்காட்சியகம், சாஞ்சி, இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாஞ்சியில் அமைந்துள்ளது. இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் இயக்குநர் நாயகமாக இருந்த சர். ஜான் மார்சல், சாஞ்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த அரும்பொருட்களை வைப்பதற்காக 1919 ஆம் ஆண்டு ஒரு சிறிய அருங்காட்சியகம் ஒன்றை அமைத்தார். பின்னர், அருங்காட்சியகத்துக்குக் கூடிய இடம் தேவைப்பட்டதனாலும், பொருட்களை அழகாகக் காட்சிக்கு வைக்கும் நோக்கத்துடனும், சாஞ்சி தூபிக்கு அண்மையில் இருந்த பள்ளிக் கட்டிடம் ஒன்று 1966 ஆம் ஆண்டில் கையேற்கப்பட்டுப் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.

இங்கு நான்கு காட்சிக் கூடங்களையும், ஒரு மண்டபத்தையும் கொண்ட இந்த அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் பெரும்பாலும் சாஞ்சிப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டவையே. எனினும், அருகாமையில் உள்ள, குல்காவோன், விதிஷா, முரேல்குர்ட், கியாரசுப்பூர் ஆகிய இடங்களிலிருந்து கிடைத்த அரும்பொருட்கள் சிலவும் இங்கு உள்ளன. இங்குள்ள பொருட்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் மத்திய காலம் வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]