உள்ளடக்கத்துக்குச் செல்

தொல்படிமவியல் திறனாய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்படிமவியல் திறனாய்வு (archetypal criticism) என்பது, இலக்கியப் படைப்பொன்றில் காணப்படும் தொல்படிமங்களையும், தொல்படிமக் கோலங்களையும் ஆராய்வதன் மூலம் அவ்விலக்கியத்தை ஆய்வு செய்யும் முறை ஆகும்.[1] இதை இனக்குழுப் பார்வை முறை, தொன்மவியல் அணுகுமுறை, சடங்கியல் அணுகுமுறை போன்ற பெயர்களாலும் குறிப்பிடுவது உண்டு.

மனித இனத்தின் தொல்பழங்கால அறிவும், உணர்வுகளும் மனித அடிமனத்தில் புதைந்து கிடக்கின்றன என்றும், பிற்காலத்தில் மனிதர்கள் அவற்றைத் தொன்மங்களாகவும், குறியீடுகளாகவும், சடங்குகளாகவும், எச்சங்களாகவும் வெளிப்படுத்துகின்றனர் என்றும் சில உளவியலாளர்கள் கூறுகின்றனர்.[2] இவ்வாறான தொல்படிமங்கள் இலக்கியங்களில் சொற்கள், சூழ்நிலைகள் போன்றவற்றினூடாக வெளிப்படுகின்றன. தொல்படிமவியல் திறனாய்வு இவற்றை ஆராய்ந்து விளக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. Literary Terms and Definitions: A
  2. நடராசன், தி. சு., 2009. பக். 191, 192.

உசாத்துணைகள்

[தொகு]
  • பஞ்சாங்கம், க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம், தஞ்சாவூர், 2011.
  • நடராசன், தி. சு., திறனாய்வுக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]