உளப்பகுப்பாய்வுத் திறனாய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உளப்பகுப்பாய்வுத் திறனாய்வு அல்லது உளவியல் திறனாய்வு என்பது, உளப்பகுப்பாய்வுத் துறை வழங்கிய பல்வேறு கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இலக்கியத்தை அணுகித் திறனாய்வு செய்வதாகும்.[1] படைப்பாளியின் மன எழுச்சியினால் உருவாகும் இலக்கியம் வாசகர்களின் மனத்துடன் பேசுகிறது என்பதனால், இலக்கியத்துக்கும் உளவியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனித மனமே அறிவியல், கலை தொடர்பான அனைத்துப் படைப்புக்களுக்கும் கருவறையாக அமைந்துள்ளதால், மனத்தை ஆய்வு செய்யும் துறையான உளவியல் இலக்கியத்தை ஆராய்வதற்கு உகந்தது என்கின்றனர்.[2] உளவியலாளர் சிக்மண்ட் ஃபிராய்டின் உளப்பகுப்பாய்வுக் கோட்பாடுகளே இவ்வகைத் திறனாய்வுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.

குறிப்புக்கள்[தொகு]

  1. பஞ்சாங்கம், க., 2011. பக். 128.
  2. நடராசன், தி. சு., 2009. பக். 88.

உசாத்துணைகள்[தொகு]

  • பஞ்சாங்கம், க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம், தஞ்சாவூர், 2011.
  • நடராசன், தி. சு., திறனாய்வுக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).

இவற்றையும் பார்க்கவும்[தொகு]