தொல்காப்பியம் புறத்திணையியல் செய்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாழ்க்கையை அகப்பொருள் என்றும், புறப்பொருள் என்றும் பகுத்துக் காண்பது தமிழர் நெறி. அகப்பொருளை அகத்திணை என்றும், புறப்பொருளைப் புறத்திணை என்றும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. புறத்திணை என்பது பொதுவாழ்க்கை. இந்தப் பொதுவாழ்க்கைப் பாங்கைக் கூறுவது இந்தப் புறத்திணையியல். அகத்திணையை 7 பிரிவுகளில் தொகுத்துக்கொண்ட தொல்காப்பியம் புறத்திணையையும் 7 பிரிவுகளாகக் கொள்கிறது. அத்துடன் அகத்திணையையும் புறத்திணையையும் ஒப்பிட்டும் காட்டுகிறது. புறத்திணைச் செய்திகள் 30 நூற்பாக்களில் சொல்லப்பட்டுள்ளன. [1]

செய்திகள்[தொகு]

 1. வெட்சித் திணை 14 வகை என்றும் அதன் துறைகள் 21 என்றும் கூறித் தொகுத்துக் காட்டப்பட்டுள்ளது. [2]
 2. வஞ்சித் திணையின் துறைகள் 13. [3]
 3. உழிஞைத் திணை 8 வகை என்றும் 12 துறைகளைக் கொண்டது என்றும் காட்டப்படுகிறது. [4]
 4. தும்பைத் திணையின் பகுதிகள் இரண்டு. துறைகள் 12. [5]
 5. வாகைத் திணையின் வகைகள் ஏழு. துறைகள் இரு பகுதிகளில் ஒன்பதாக உள்ளன. [6]
 6. காஞ்சித் திணை என்பது தொல்காப்பியத்தில் நிலையில்லாத உலக வாழ்க்கை பற்றிய செய்திகளைக் கூறுவது. [7]
 7. பாடாண் திணை என்பது ஆண்மகனையும், கடவுளையும் பாடுவது. [8]

துறை-விளக்கம், அகர வரிசை[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

 1. இளம்பூரணர் பகுப்பு
 2. நூற்பா தொல்காப்பியம் பொருளதிகாரம் 59 முதல் 63
 3. நூற்பா தொல்காப்பியம் பொருளதிகாரம் 64, 65
 4. நூற்பா தொல்காப்பியம் பொருளதிகாரம் 66 முதல் 69
 5. நூற்பா தொல்காப்பியம் பொருளதிகாரம் 70 முதல் 72
 6. நூற்பா தொல்காப்பியம் பொருளதிகாரம் 73 முதல் 75
 7. நூற்பா தொல்காப்பியம் பொருளதிகாரம் 76, 77
 8. நூற்பா தொல்காப்பியம் பொருளதிகாரம் 78 முதல் 88