உள்ளடக்கத்துக்குச் செல்

உழிஞைத் திணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகைவர் நாட்டின் மீது படையோடு சென்று மதிலை வளைத்துப் போரிடுவது உழிஞைத் திணையாகும். இவ்வாறு போரிடும் வீரர்கள் உழிஞைக் கொடியாலான மாலையைச் சூடிக்கொண்டு போரிடுவர்.
பகைவன் ஒளிந்த அரணத்தைக் கைப்பற்ற எண்ணிய மன்னன் அம்மதிலை வளைப்பான். இவ்வாறு வளைக்குங்கால் குடை, வாள் ஆகியவற்றில் ஒன்றைப் புற வீடு விடுதலும், மதிலின் புறத்தே சென்று தங்குதலும், தோற்படை பெருக்கம் பேசுதலும், காவற்காட்டைக் கடத்தலும், கிடங்கில் போரிடுதலும், மதில்மீது ஏணி சார்த்திப் போரிடுதலும் நடைபெறும். பின்னர் மதிலின் உள்ளே குதித்து அகத்தோரை வென்று அரணம் கைப்பற்றப்படும்.
மதிலை அழித்துக் கழுதை ஏர் கொண்டு உழுது காவடி விதைத்தலும் (வரகு, எள், கொள்ளு முதலியன விதைத்தல்) , வாளைக்கழுவுதலும், முடிசூடிக் கொள்வதும் நடைபெறும். அகத்தோன் நிறையளிக்க அதனைப் பெற்று மதிலை அழிக்காமல் திரும்புவதும் உண்டு. ஒரு மதிலை அழித்தவுடன் மற்ற மதிலகத்துள்ளோரும் தத்தம் முரண் அவிதலும் உண்டு. இதுவே உழிஞைத் திணைஆகும்.


வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்

புறசெய்திகளைகன் செய்திகளைக் கூறும் இந்தப் பழம்பாடல் மூலம் இத்திணையை அழகாக விளக்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உழிஞைத்_திணை&oldid=3304549" இலிருந்து மீள்விக்கப்பட்டது