தொட்ட மாலூர்

ஆள்கூறுகள்: 12°38′49″N 77°10′47″E / 12.647017°N 77.179844°E / 12.647017; 77.179844
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலூர்
தொட்ட மாலூர்
village
மாலூர் is located in கருநாடகம்
மாலூர்
மாலூர்
Location in Karnataka, India
மாலூர் is located in இந்தியா
மாலூர்
மாலூர்
மாலூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°38′49″N 77°10′47″E / 12.647017°N 77.179844°E / 12.647017; 77.179844
நாடு India
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ராமநகரம்
Languages
 • Officialகன்னடம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

தொட்ட மாலூர் (Mallur, Karnataka) என்பது இந்திய மாநிலமான, கர்நாடகத்தின், ராமநகரம் மாவட்டம், சென்னபட்டணம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊரானது கண்வ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மேலும் இந்த ஊரானது 12 ஆம் நூற்றாண்டில் சோழப் பேரசு காலத்தில் கட்டப்பட்ட அப்ராமேயமய சுவாமி கோயில், அரவிந்தவள்ளி மற்றும் அம்பேகல்லு நவநீத கிருஷ்ணன் கோயில் போன்ற கோயில்களுக்கு புகழ்பெற்றது. இந்த ஊரானது பெங்களூர் மைசூர் மாநில நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து தோராயமாக 60 கி.மீ தொலைவிலும் மைசூரில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது சென்னபட்டணத்தில் இருந்து 3 கீ. மீ. தொலைவில் உள்ளது.

அம்பேகலு நவநீத கிருஷ்ணரின் சிலை (கையில் வெண்ணெயுடன் தவழும் கிருஷ்ணர்), வடிவில் உள்ள ஒரே கிருஷ்ணர் உள்ள கோயில் இது என்று நம்பப்படுகிறது. த்வைத வேதாந்தத்தின் முக்கிய துறவியான வியாசராஜா (வியாசதீர்த்தர்) என்பவரால் இந்த சிலை நிறுவப்பட்டது எனப்படுகிறது. புகழ்பெற்ற கிருதி (இசையமைப்பு அல்லது பாடல்) "ஜகதோதரனா அடிசிடலே யசோதே" இந்த சிலையின் அழகைப் போற்றும் வகையில் கர்நாடக இசையின் மிக முக்கிய இசையமைப்பாளரான புரந்தரதாசரால் இயற்றப்பட்டது.

போக்குவரத்து: பேருந்து மற்றும் தொடருந்து மூலம் சென்னபட்டணத்தை அடையலாம். சென்னப்பட்டணத்தில் இருந்து உள்ளூர் தானிகள் மற்றும் தனியார் வாகனங்கள் தொட்டமாலூருக்கு பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.

வரலாறு[தொகு]

அப்ராமேயமய சுவாமி கோயில் நுழைவாயில்

இந்த ஊர் கோயில் அதிட்டாத்தில் உள்ள 11ஆம் நூற்றாண்டு தமிழ்க் கல்வெட்டுகளில் இந்த ஊர் மழவூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் கன்னடத்தில் மால்லூர் என மருவியது. இங்குள்ள கோயிலானது அப்ரமேய விண்ணகர ஆழ்வர் என்றும் கல்வெட்டில் குறிக்கபட்டுள்ளது. அக்கோயில் தற்போது அப்ராமேயமய சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. இக்கோயில் 11ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரச்சின் தளபதியான அப்ரமேயரால் கட்டப்பட்டது என்பது வரலாறு. அதனாலேயே இக்கோயில் அப்ரமேயரின் பெயரால் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் சிறப்பு அம்சமாக சோழர்களின் சின்னமான புலி சின்னமும் இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது.[1] தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் கோயிலைப் போன்று ஆழமான அஸ்திவாரம் இல்லாமல் இந்த மணலில் அப்ரமேய சுவாமி கோயில் கட்டப்பட்டுள்ளதாக செவிவழிக் கதைகள் கூறுகின்றன கூறுகின்றன.

நிலவியல்[தொகு]

தொட்ட மாலூர் இல் அமைந்துள்ளது. 12°38′49″N 77°10′47″E / 12.647017°N 77.179844°E / 12.647017; 77.179844[2] இது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 739 மீட்டர் (2424 அடி) உயரத்தில் உள்ளது.

விழாக்கள்[தொகு]

இராமபிரமேய சுவாமியின் பெருந்தேரோட்ட விழா ஆண்டுதோறும் ஏப்ரல்/மே மாதங்களில் நடைபெறும்.

குறிப்புகள்[தொகு]

  1. "இராஜராஜ சோழரின் படை தளபதி கட்டிய கோவில்" (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-07-10.
  2. Falling Rain Genomics, Inc - Mallur
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொட்ட_மாலூர்&oldid=3800667" இலிருந்து மீள்விக்கப்பட்டது