தைவான் நீரிணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தைவான் நீரிணை (Taiwan Strait), மேலும் பிற பெயர்களால் அழைக்கப்படுவது, இது 180-கிலோமீட்டர் (110 mi) அகலத்தில் தைவான் தீவை சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து பிரிக்கும் பரந்த நீரிணை ஆகும். இந்த நீரிணையானது தற்போது தென்சீனக் கடலின் ஒரு பகுதியாக உள்ளது மேலும் வடக்கே கிழக்கு சீனக் கடலுடன் இணைகிறது. இந்த நீரிணையின் குறுகிய பகுதியானது 130 km (81 mi) அகலத்துடன் உள்ளது.[1]

பெயர்கள்[தொகு]

தைவான் நீரிணை முன்னாள் பெயர்கள் பெயர்களில் ஃபார்மோசா நீரிணை ( Formosa Strait அல்லது Strait of Formosa,) போன்றவை அடங்கும். சீனாவின் புஜியான் மாகாணத்தில் புஜியான் நீரிணை அல்லது அல்லது புஜியான் என் நீரிணையின் மேற்கு கரையை குறிப்பிடுகிறது; [2] மற்றும் பிளாக் டிச் (Black Ditch), என்று நீரிணையின் பெயரை ஹோக்கீன் மற்றும் கேசிய மொழியில் குறிப்பிடப்படுகிறது.

நிலவியல்[தொகு]

தைவான் நீரிணை என்பது புஜியான் மாகாணத்தை தைவான் தீவிலிருந்து பிரிக்கும் நீரினைப் பகுதியாகும்.

தற்போதைய சர்வதேச ஒப்பந்தம் தைவான் நீரிணையை வரையறுக்கவில்லை ஆனால் அதன் நீர்ப் பகுதியானது தென்சீனக் கடல் பகுதியாக கருதப்படுகிறது.   அதன் வடக்கு எல்லையானது கேப் ஃபுகுய் (தைவான் தீவின் வடக்கு திசை) முதல் நியுஷன் தீவு வரையும், தென் முனையானது பிங்டான் தீவு வரை சென்று பின்னர் மேற்கு நோக்கி 25 ° 24 ′ N. உடன் புஜியன் மாகாணத்தின் கடற்கரைவரை செல்கிறது. [3]

சர்வதேச நீர்பரப்புக்குரிய அமைப்பின் பெருங்கடல்கள் மற்றும் கடல்களின் வரம்புகள் என்னும் புதிய பதிப்பிற்காக இன்னும் அனுமதிக்கப்படாத வரைவு நூலில் தைவான் நீரிணை துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளத. அதில் இது வட பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக வகைப்படுத்துகிறது. [4] மேலும் இதில் தைவான் நீரிணையை கிழக்கு சீனக்கடல் மற்றும் தென் சீனக் கடல்களுக்கு இடையில் உள்ள நீராக கொள்கிறது மற்றும் அதை வரையறுக்கிறது: [5]

பிரதான நிலப்பரப்பில் உள்ள சீன மக்கள் குடியரசு (பி.ஆர்.சி) மற்றும் தைவான் தீவில் உள்ள சீனக் குடியரசு (ஆர்.ஓ.சி) ஆகிய இரண்டும் பொருளாதாரத் தனியுரிமைப் பகுதியாக நீரிணைப்பு பகுதியைக் கருதும் ஒரு-சீனக் கொள்கையை ஆதரிக்கின்றன. நடைமுறையில், கிராஸ்-ஸ்ட்ரெய்ட் மீடியன் (t 海峽中線, s 海峡中线, Hǎixiá Zhōngxiàn) என அழைக்கப்படும் ஒரு கடல் எல்லைக் கட்டுப்பாடு உள்ளது. முழு நீரிணையும் ஆசியாவின் கண்டத் திட்டில் உள்ளது. இது கிட்டத்தட்ட 150 m (490 ft) ஆழத்திற்கும் குறைவாகவே உள்ளது. தைவானின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து அந்த ஆழத்தில் குறுகிய பள்ளத்தாக்கு உள்ளது. இது போல, நீரிணையில் பல தீவுகள் உள்ளன. புஜியான் கடற்கரையிலிருந்து மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான தீவுகள் சியாமென் மற்றும் குலாங்யு, பிங்டன் (ஐ.எச்.ஓ விளக்கத்தின் "ஹைட்டன்"), கின்மென் மற்றும் மாட்சு போன்றவை ஆகும். முதல் மூன்று தீவுகள் சீன மக்கள் குடியரசின் கட்டுப்பட்டில் உள்ளன; நீரிணையில் உள்ள மற்ற இரண்டு தீவுகளான பெங்கு அல்லது பெஸ்கடோர்ஸ் ஆகியன சீனக் குடியரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. பெங்கு தீவுகளுக்கு வடக்கே 40-60 கிமீ (25–37 மைல்) தொலைவில் நீருக்கடியில் ஒரு பெரிய கடல் அடித்தள மேடு உள்ளது.[6]

டிங் ஆறு தவிர புஜியான் மாகாணத்தின் அனைத்து ஆறுகளும் தைவான் நீரிணையில் கலக்கின்றன. இதில் மிகப்பெரிய இரண்டு ஆறுகள் மின் மற்றும் ஜியுலாங் ஆகும் .

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தைவான்_நீரிணை&oldid=2872470" இருந்து மீள்விக்கப்பட்டது