தே. இரா. கார்த்திகேயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. ஆர். கார்த்திகேயன்
D.R Karthikeyan
இயக்குநர் நடுவண் புலனாய்வுச் செயலகம்
பதவியில்
சனவரி 31, 1998 (1998-01-31) – 31 மார்ச்சு 1998 (1998-03-31)
முன்னவர் ஆர். சி. சர்மா
பின்வந்தவர் டி. என். மிஸ்ரா (தற்காலிகம்)
தனிநபர் தகவல்
பிறப்பு 2 அக்டோபர் 1939
தேவராயபுரம், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை
பணி இந்தியக் காவல் பணி
விருதுகள் பத்மசிறீ
2010

தேவராயபுரம் இராமசாமி கார்த்திகேயன் (Devarayapuram Ramasamy Kaarthikeyan), இந்தியக் காவல் பணியின் 1964-ஆம் ஆண்டின் கர்நாடகத் தொகுதி அதிகாரியும், சிபிஐ அமைப்பின் முன்னாள் இயக்குனரும் ஆவார். இராஜீவ் காந்தி படுகொலையை விசாரித்த சிபிஐ அமைப்பின் சிறப்பு விசாரணைக் குழுவின் தலைமை அதிகாரியாக செயல்பட்டவர்.[1][2][3]31 மார்ச்சு 1998 அன்று பணி ஓய்வு பெற்ற பின் கார்த்திகேயன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமை இயக்குநராக பணியாற்றியவர். இவருக்கு இந்திய அரசு 2010-ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கியது.[4]

பிறப்பு[தொகு]

கார்த்திகேயன், வேளாண்மைக் குடும்பத்தில் இராமசாமி என்பவருக்கு 2 அக்டோபர் 1939 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், தேவராயபுரம் ஊராட்சியில் உள்ள தேவராயபுரம் கிராமத்தில் பிறந்தார்.

கல்வி[தொகு]

கார்த்திகேயன் அண்ணாமலைப் பல்கலைக்கழகக்த்தில் வேதியியல் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் வேளாண்மைக் கல்வியும் பயின்றார். பின்னர் சென்னை அம்பேத்கார் அரசு சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வி பயின்றார்.

எழுதிய ஆங்கில நூல்கள்[தொகு]

கார்த்திகேயன் தனியாகவும் மற்றும் பிறருடன் இணைந்தும் பயங்கரவாதம், மனித உரிமைகள் மற்றும் இராஜீவ் காந்தி படுகொலை வழக்கு குறித்து மூன்று ஆங்கில நூல்கள் எழுதியுள்ளார்.[5]

  1. The Rajiv Gandhi Assassination Investigation (English) By D.R. Kaarthikeyan & Radha Vinod Raju
  2. Pathways out of Terrorism and Insurgency - The Dynamics of Terrorist Violence and Peace Processes By D.R. Kaarthikeyan & L Sergio Germani
  3. HUMAN RIGHTS - Problems and Solutions By D.R. Kaarthikeyan

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Varughese, Suma. "Transformation - Interviews - D.R. Kaarthikeyan". Life Positive. Archived from the original on 18 ஜனவரி 2010. https://web.archive.org/web/20100118042245/http://www.lifepositive.com/mind/personal-growth/transformation/transformation2-article.asp. பார்த்த நாள்: 7 March 2010. 
  2. "The Rediff Interview/ D R Karthikeyan". Rediff. May 14, 1999. http://www.rediff.com/news/1999/may/14kar.htm. பார்த்த நாள்: 7 March 2010. 
  3. "A crack investigative team". Frontline 15 (3). February 7–20, 1998. Archived from the original on 18 ஏப்ரல் 2012. https://web.archive.org/web/20120418005516/http://www.hindu.com/fline/fl1503/15030120.htm. பார்த்த நாள்: 7 March 2010. 
  4. "Aamir, Rahman awarded Padma Bhushan". March 31, 2010. Archived from the original on அக்டோபர் 18, 2012. https://web.archive.org/web/20121018053435/http://www.hindustantimes.com/News-Feed/India/Aamir-Rahman-awarded-Padma-Bhushan/Article1-525510.aspx. பார்த்த நாள்: January 16, 2012. 
  5. "Books by D R Karthikeyan I P S (R)". 2022-09-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-09-17 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]