தேவை விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவை விதி (law of demand) என்பது பொதுவான நிலமையொன்றில் தேவையைத் தீர்மானிக்கின்ற ஏனைய காரணிகள் மாறாதிருக்கும் போது, விலைக்கும் தேவைத் தொகைக்கும் இடையில் எதிர்க்கணிய தொடர்பு நிலவுவதாகும். அதாவது அந்த பொருளின் விலை குறைந்தால் அதன் தேவை அதிகரிக்கும்.

இந்தத் தேவை விதிக்கு அடிப்படையாக அமைவன:

  • குறைந்து செல்லும் எல்லைப்பயன்
  • நேர்க்கணிய வருமான விளைவு விதி
  • நேர்க்கணிய பதிலீட்டு விளைவு

இவ்விதியை பின்வருமாறு விளக்கலாம்.

ஏனைய நிலைமைகள் மாறாமல் என்று இங்கு குறிப்பிடுவது நுகர்வோரின் வருமானம், சுவை, ஒரு நாட்டின் வியாபார நிலை போன்றவற்றை குறிக்கும்.

ஒரு தனி நபரின் தேவைப்பட்டியல்

ஒரு பேனாவின் விலை (ஒரு டசனுக்கு ரூபாயில்) தேவைப்படும் அளவு (டசன்களில்)
10
1
5
2
4
3
3
4
2
5

இப்பட்டியலை நோக்கும் பொழுது பேனாவின் விலை குறைய குறைய தேவை அதிகரிக்கிறது என்பதும் விலை அதிகரிக்க அதிகரிக்க தேவை குறைகிறது என்பது தெளிவாகிறது.

விலைக்கும் தேவைக்கும் இடையேயுள்ள தொடர்பு

உதாரணமாக விலை ரூ10 இலிருந்து 5 ஆக குறைந்தால்: தேவையின் அளவு 1 டஜனிலிருந்து 2 டஜன்களாக அதிகரிக்கிறது. அதாவது விலை குறைய குறைய தேவை அதிகரிக்கிறது என்பதை காட்டுகிறது. இதன் காரணம் நுகர்வோரின் உண்மை வருமானம் அதிகரிப்பதால் என்பதாகும். அவ்வாறே விலை ரூ2 இலிருந்து 3ஆக உயர்ந்தால் தேவை 5 டஜன்களிருந்து 4 டஜன்களாக குறைகிறது அதாவது விலை அதிகரிக்க அதிகரிக்க தேவை குறைகிறது என்பதை இது காட்டுகிறது.

எனவே தேவை விதி விலைக்கும் தேவைக்கும் இடையேயுள்ள தலை கீழ் தொடர்பினை இது காட்டுகிறது.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவை_விதி&oldid=3850245" இலிருந்து மீள்விக்கப்பட்டது