தேவை
பொருளியல் கருத்துப்படி, ஒரு பண்டத்தை தனக்கு உடைமை ஆக்குவதற்கான விருப்பமும் அதற்குண்டான விலைக்கு பணம் செலுத்த இயலும் நுகர்வோரின் நிலை தேவை அல்லது கேள்வி (Demand) ஆகும். தேவை என்ற சொல் ஒரு பண்டம் அல்லது சேவையை குறிப்பிட்ட நேரத்தில் வாங்குவதற்கான விருப்பம் அல்லது ஆற்றலைக் குறிக்கும். நுகர்வோரின் வருவாயைப் பொருத்து விருப்பத்தின் அளவு மாறக்கூடியது என்றும் தேவையை வரையறுக்கலாம்.
பொருளியல் அறிஞர்கள் தேவையை ஒரு அட்டவணையில் பதித்து, அதை ஒரு வரைபடத்தில் தலைகீழ் (கீழ் நோக்கி வளைந்து செல்) கோடாக (Downward sloping) வரைகின்றனர். இதற்கு தேவைக் கோடு (Demand Curve) என்று பெயர். இத் தலைகீழ் கோடு, விலைக்கும் தேவைக்கும் உள்ள தொடர்பை பிரதிபலிக்கிறது. விலை உயரும்போது தேவை குறையும். இத் தேவைக்கோடு குறைந்து செல் பயன்பாட்டு கோட்டுக்கு (Marginal Utility Curve) இணையானதாகும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sethi, D.K; Andrews, U. ISC Economics (18th ed.). Macmillan. p. 9. ISBN 9789386811684.
- ↑ Sethi, D.K. ISC Economics Frank (18th ed.). Macmillan Publisher. p. 10. ISBN 9789386811684.
- ↑ Sethi, D.K. Frank ISC Economics (18th ed.). Macmillan. p. 11. ISBN 9789386811684.