தேனாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேனாரி (Thenari) என்பது தென் இந்திய மாநிலமான, கேரளத்தின், பாலக்காடு மாவட்டம் மலம்புழா ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த கிராமம் மாவட்ட தலைமையகமான பாலக்காட்டுக்கு கிழக்கே 14 கி.மீ தொலைவிலும், மலம்புழாவிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், மாநில தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 297 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1]

தேனேரியில் உள்ள இராமர் கோயிலில் உள்ள நீரூற்றின் காரணமாகவே இந்த ஊருக்கு தேனேரி என்ற பெயர் ஏற்பட்டது. இந்த ஊற்றின் நீர் கங்கை நீரைப்போல புனிதமானது என்ற நம்பிக்கை உள்ளதால், பலரும் இந்த ஊற்றை நாடி வருகின்றனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனாரி&oldid=3030801" இலிருந்து மீள்விக்கப்பட்டது