உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய யுனானி மருத்துவ நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் (National Institute of Unani Medicine) என்பது இந்தியாவில் யுனானி மருத்துவத்தில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தன்னாட்சி அமைப்பு ஆகும். இது 1984ஆம் ஆண்டு பெங்களூரில் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஓமியோபதி (ஆயுஷ்) பிரிவுகளை உள்ளடக்கி சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், இந்திய அரசின் கீழ் நிறுவப்பட்டது. இது இந்திய அரசு மற்றும் கர்நாடக அரசின்[1] கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது.[2]

இந்நிறுவனத்தில் 2004ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிறுவனம் ராஜீவ்காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், பெங்களூர், அங்கீகாரத்துடன் இணைவு பெற்ற கல்வி நிறுவனமாகச் செயல்படுகிறது. முதுநிலை மருத்துவப் படிப்பினை பத்து வெவ்வேறு பாடங்களில், பொது மருத்துவம் (மூலஜாட்), மருந்தியல் (இளமுல் அட்விதா), தடுப்பு மற்றும் சமூக மருத்துவம் (தகாப்சூய் வா சமாஜ் திப்), மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம் (இல்முல் கபாலத் வா அம்ராஸ் நிஸ்வான்), மருந்தகம் (இல்முல் சைட்லா), அறுவை சிகிச்சை (இல்முல் ஜ்ரஹாத்), புத்துணர்வு சிகிச்சை (இலாஜ் பிட் தத்பீரீர்), அடிப்படை கோட்பாடுகள் (குல்லியாத்), நோயியல் (மஹியத்துல் அம்ராஸ்) மற்றும் தோல் மற்றும் வாத நோய் (அம்ராசி ஜில்ட் வா மாபாசில்) முதலியன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "National Institutes". AYUSH, Government of India. Archived from the original on 2013-11-25.
  2. "National Institute of Unani Medicine, Bangalore". AYUSH. Archived from the original on 2013-12-20. பார்க்கப்பட்ட நாள் 2013-12-20.
  3. "Courses". National Institute of Unani Medicine. Archived from the original on 2013-11-27. பார்க்கப்பட்ட நாள் 2013-12-20.

வெளி இணைப்புகள்

[தொகு]