தேசிய ஆயுர்வேத நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய ஆயுர்வேத நாள்
National Ayurveda Day
2017 ஆம் ஆண்டு 2 ஆவது ஆயுர்வேத நாளன்று தில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் பிரதமர் நரேந்திர மோடி
கடைபிடிப்போர் இந்தியா
2023 இல் நாள்11 நவம்பர் 2022
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனஆயுர்வேதம், தன்வந்திரி

தேசிய ஆயுர்வேத நாள் (National Ayurveda Day) ஒவ்வோர் ஆண்டும் [1] இந்தியாவிலும் உலகெங்கிலும் மருத்துவத்தின் இந்து கடவுளான தன்வந்திரியின் பிறந்தநாளின் போது அனுசரிக்கப்படுகிறது.[2] புராணங்கள் இவரை ஆயுர்வேதத்தின் கடவுள் என்று குறிப்பிடுகின்றன.[3] 2016 ஆம் ஆண்டில், இந்திய அரசின் ஆயுசு அமைச்சகம் தன்வந்திரியின் பிறந்த நாளை தேசிய ஆயுர்வேத தினமாக அறிவித்தது.[4] முதல் ஆயுர்வேத தினம் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதியன்று [5] கொண்டாடப்பட்டது. ஆயுர்வேத நாள் என்ற பெயராலும் இந்நாள் அழைக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

தேசிய ஆயுர்வேத நாள் இந்தியாவில் முதன்முதலில் 28 அக்டோபர் 2016 அன்று தன்வந்திரியின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் அனுசரிக்கப்பட்டது. உலகளவில் மருத்துவத்திற்கான மிகவும் பழமையான மற்றும் முழுமையான அணுகுமுறைகளில் ஒன்றாக ஆயுர்வேதத்தை ஊக்குவிக்கவும் ஆயுர்வேதத்தை உலகமயமாக்கவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. ஆயுர்வேத நாளை கொண்டாட பல்வேறு கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் இலவச சுகாதார முகாம்களை ஏற்பாடு செய்து இலவசமாக மருந்துகளை வழங்குகின்றன.[6][7]

2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.[8] ஆயுர்வேத நாளன்று ஆயுர்வேத சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கு பங்களித்தவர்களை அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய தன்வந்திரி ஆயுர்வேத விருது' வழங்கி கவுரவிக்கிறது. தேசிய தன்வந்திரி ஆயுர்வேத விருதுகள் ஒரு பாராட்டு கோப்பை (தன்வந்திரி சிலை) மற்றும் 5 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[9]

2022 ஆம் ஆண்டில், ஆயுர்வேதத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக , தில்லியின் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் MyGov என்ற தளத்தில் 'ஆயுர்வேதா வினாடி வினா'வை அறிமுகப்படுத்தியது. . 2022 ஆம் ஆண்டு ஆயுர்வேத நாள் அக்டோபர் 23 அன்று கொண்டாடப்பட்டது.[10] 2021 ஆம் ஆண்டில், நவம்பர் 2, அன்று ஆரோக்கியம் மற்றும் குணப்படுத்துதல் பற்றிய ஆயுர்வேதக் கொள்கைகளை மேம்படுத்துவதற்காக 'ஊட்டச்சத்துக்காக ஆயுர்வேதம் என்ற கருப்பொருளுடன் ஆயுர்வேத நாள் கொண்டாடப்பட்டது.[11]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Commission celebrates Ayurveda Day". The Fiji Times. November 1, 2022. https://www.fijitimes.com/commission-celebrates-ayurveda-day/. 
  2. "Ayurveda Day Celebrated". The Indian Panorama. November 12, 2022. https://www.theindianpanorama.news/ny-nj-ct/ayurveda-day-celebrated/. 
  3. "Dhanwantari Puja as ‘Ayurveda Day’". Pioneer (newspaper). October 23, 2022. https://www.dailypioneer.com/2022/state-editions/dhanwantari-puja-as----ayurveda-day---.html. 
  4. "National Ayurveda Day 2022: Theme, significance and all you need to know". இந்தியா டுடே. October 22, 2022. https://www.indiatoday.in/information/story/national-ayurveda-day-2022-theme-significance-and-all-you-need-to-know-2288599-2022-10-23. 
  5. "Dhanteras to be observed as National Ayurveda Day". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. September 30, 2016. https://timesofindia.indiatimes.com/city/varanasi/dhanteras-to-be-observed-as-national-ayurveda-day/articleshow/54599037.cms. 
  6. "Health camp held on Ayurveda Day". Pioneer (newspaper). October 23, 2022. https://www.dailypioneer.com/2022/state-editions/health-camp-held-on-ayurveda-day.html. 
  7. "Slew of programmes to mark Ayurveda Day". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. October 22, 2022. https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/slew-of-programmes-to-mark-ayurveda-day/articleshow/95022981.cms. 
  8. . October 17, 2022. 
  9. . November 5, 2018. 
  10. "All India Institute of Ayurveda launches 6-week programme for Ayurveda Day". தி இந்து. September 12, 2022. https://www.thehindu.com/sci-tech/health/medicine-and-research/all-india-institute-of-ayurveda-launches-6-week-programme-for-ayurveda-day/article65883506.ece. 
  11. "Ayurveda Day 2021: Why is it celebrated on Dhanwantri Jayanti? Know Theme, History, Significance". Jagran Josh. November 2, 2021. https://www.jagranjosh.com/current-affairs/ayurveda-day-2021-why-is-it-celebrated-on-dhanwantri-jayanti-know-theme-history-significance-1635850731-1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_ஆயுர்வேத_நாள்&oldid=3743443" இலிருந்து மீள்விக்கப்பட்டது