தேசியக் கலைக் கூடம், சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சென்னை தேசிய கலைக்கூடம்

தேசிய கலைக்கூடம் (National Art Gallery) சென்னையின் எழும்பூர் நகரில் அமைந்துள்ள இந்தியாவின் பழமையான கலைக்கூடங்களில் ஒன்றாகும்.[1] இது எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ளது. அரசாங்க அருங்காட்சியகம் மற்றும் கன்னிமரா பொது நூலகம் ஆகியன இங்கு இடம்பெற்றுள்ளன. ஆந்திரப் பிரதேசம், சத்தியவேடுவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவப்புக் கற்களால் இந்தக் கலைக் கூடம் 1906 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

இராணி விக்டோரியாவின் பொன்விழா கொண்டாட்டத்தின் போது இந்த தேசியக் கலைக் கூடம் திரு. என்றி இர்வின் அவர்களால் வடிவமைக்கப்பட்ட மாதிரி உருவத்தில் கட்டப்பட்டது. சென்னை மாநகராட்சியின் பாரம்பரிய கலைக் கூடமாக அடையாளம் காட்டப்பட்டது. கட்டிடத்தின் பலவீனமான உறுதித்தன்மையால் 2002 ஆம் ஆண்டுடன் இக் கலைக்கூடம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு தடை செய்யப்பட்டது.

முகத்தோற்றக் கூறுகள்[தொகு]

இக் கலைக் கூடத்தில் முகலாயர்களின் வண்ண ஓவியங்களும் மற்றும் இராச இரவிவர்மாவின் அரிய வகை ஓவியங்களும் இடம் பெற்றிருக்கின்றன.[2] பலவகையான தஞ்சாவூர் ஓவியங்களும் உள்ளன.[3] லார்ட் கன்னிமரா மற்றும் வில்லியம் பென்ட்டிங்க் ஆகிய பிரிட்டிஷ் அதிகாரிகளின் உருவச் சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன.[4] மேலும் எண்ணிலடங்கா சிற்றோவியங்களும் இக் கலைக்கூடத்தில் உள்ளன.

மீட்டளிப்பு[தொகு]

2013 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களால் 110 மில்லியன் செலவில் கலைக் கூடத்தினை நிபுணர்கள் குழுவின் உதவியுடன் முகப்புத் தோற்றம் மீட்டளிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "national art gallery". wikimapia. 7 September 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "ravi varma paintings". Chennai Museum. 7 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Tanjore paintings". Chennai Museum. 7 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
  4. "British Portraits". Chennai Museum. 7 June 2012 அன்று பார்க்கப்பட்டது.