தெபாகி போஸ்
தெபாகி போஸ் | |
---|---|
![]() | |
பிறப்பு | தெபாகி குமார் போஸ் 1898 வர்த்தமான் |
இறப்பு | 1971 (அகவை 72–73) கொல்கத்தா |
விருதுகள் | பத்மசிறீ |
தெபாகி போஸ் (Debaki Bose;1898-1971), தெபாக்கி குமார் போஸ் என்றும் அழைக்கப்படும் இவர் இந்திய இயக்குநரும், எழுத்தாளரும், நடிகரும் ஆவார். இவர் பாலிவுட் மற்றும் வங்காளத் திரைப்படங்களில் தனது பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டார்.[1] 1898 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்திலிருந்த வர்தமானிலுள்ள அகல்போஷ் என்ற இடத்தில் (இப்போது கிழக்கு வர்த்தமான்) பிறந்தார். இவர் இந்தியத் திரைப்படங்களில் ஒலி மற்றும் இசையின் புதுமையான பயன்பாட்டிற்காக அறியப்படுகிறார். முதலில் தீரன் கங்குலியின் பிரித்தானிய டொமினியன் பிலிம்ஸ் பதாகையின் கீழ் பணிபுரிந்தார். பின்னர் பிரமாதேஷ் பருவாவின் பருவா பிக்சர்ஸ் உடன் பணியாற்றினார். இறுதியாக 1932 இல் நியூ தியேட்டர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர், 1945 இல் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான தெபாகி புரொடக்சன்ஸைத் தொடங்கினார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]தெபாகி போஸ் வர்த்தமானில் ஒரு வழக்கறிஞரின் மகனாகப் பிறந்தார்.[2] வித்யாசாகர் கல்லூரியில் பட்டம் பெற்றார.[3] ஒத்துழையாமை இயக்கத்திற்கான மகாத்மா காந்தியின் அழைப்பால் ஈர்க்கப்பட்ட இவர், பல்கலைக்கழத்திலிருந்து வெளியேறி, சொந்தமாக வாழத் தொடங்கினார்.[2] அவர் உள்ளூர் சந்தையில் துண்டுகள் விற்கும் ஒரு கடையைத் திறந்தார். மேலும் சக்தி என்ற உள்ளூர் வார இதழின் ஆசிரியராகவும் இருந்தார்.[2] கொல்கத்தாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரான தீரன் கங்குலியைச் சந்தித்தார். இவரது எழுத்துத் திறனைப் பற்றி அறிந்த கங்குலி, திரைப்பட வசனங்களை எழுத கொல்கத்தாவுக்கு அழைத்தார். இந்த முயற்சி பிரித்தானிய டொமினியன் பிலிம்ஸ் தயாரித்த கமோனர் அகுன் (அல்லது ஃபிளேம்ஸ் ஆஃப் ஃப்ளெஷ் ) என்ற முதல் திரைப்படமாக உச்சக்கட்டத்தை அடைந்தது.[4]
இறப்பு
[தொகு]17 நவம்பர் 1971 அன்று இந்தியாவின் மேற்கு வங்காளத்திலுள்ள கொல்கத்தாவில் இறந்தார்.
சான்றுகள்
[தொகு]- ↑ "Debaki Kumar Bose movies, filmography, biography and songs - Cinestaan.com". Cinestaan. Retrieved 2018-02-27.
- ↑ 2.0 2.1 2.2 Pandya, Sonal. "Debaki Bose — The first internationally honoured Indian filmmaker". Cinestaan. Retrieved 2018-02-27.
- ↑ "Debaki Bose".
- ↑ "An article from BFJA website". Archived from the original on 2 May 2008. Retrieved 24 April 2008.