துரான் அமீர்சுலைமானி
துரான் அமீர்சுலைமானி | |
---|---|
பிறப்பு | கமர் ஓல்-மொலூக் அமீர்சுலைமானி 4 பெப்ரவரி 1905 தெகுரான், கஜர் ஈரான் |
இறப்பு | 24 சூலை 1994 பாரிசு, பிரான்சு | (அகவை 89)
புதைத்த இடம் | சிமிட்டியர் பாரிசியன் டி தியாசு, பாரிசு |
துணைவர் | ரேசா ஷா பகலவி (தி. 1922; ம.மு. 1923) Zabihollah Malekpour (தி. 1945) |
குழந்தைகளின் பெயர்கள் | இளவரசர் குலாம் ரெசா பகலவி |
தந்தை | இசா கான் மஜித் எஸ்-சுல்தானே |
தாய் | சம்சு உல்-மொலூக் மொனாசா கத் -தௌலத்[1] |
துரான் அமீர்சுலைமானி ( Turan Amirsoleimani ) ( பிறப்பு கமர் ஓல்-மொலூக் ) 4 பிப்ரவரி 1905 - 24 ஜூலை 1994) ஈரானை ஆட்சி செய்த பகலவி அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும், மற்றும் ரெசா ஷா பகலவியின் மூன்றாவது மனைவியும் ஆவார். இவருக்கு குலாம் ரெசா பகலவி என்ற மகன் இருந்தார். [2]
சுயசரிதை
[தொகு]துரான் 1905 இல் கமர் ஓல்-மொலூக் அமீர்சுலைமானி என்ற பெயரில் இசா கான் மஜித் எஸ்-சுல்தானே என்பவருக்கு பிறந்தார். தெகுரானில் உள்ள நமோசு உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியைப் பெற்றார். 1922 இல், இவர் அந்த நேரத்தில் போர் அமைச்சராக இருந்த ரெசா கானை மணந்தார். அடுத்த ஆண்டு இவர்களுக்கு ஒரே மகனான குலாம் ரெசா பகலவி பிறந்தார்.[3] மகன் பிறந்த சிறிது காலத்தில் தம்பதியினர் விவாகரத்து செய்தனர். [3] அதற்குக் காரணம், ரெசா கான் இவரை ஒரு திமிர்பிடித்தவராகக் கருதினார். [4]
விவாகரத்துக்குப் பிறகு, இவர் மறுமணம் செய்வதைத் தவிர்த்து, தனது மகன் குலாம் ரெசாவுடன் அரச இல்லம் ஒன்றில் வசித்து வந்தார். 1945 இல், ரெசா ஷா இறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு, இவர் பிரபல வணிகரான சபியுல்லா மாலெக்பூர் என்பவரை மணந்தார். ரெசா ஷாவின் இரண்டாவது மனைவியான தாட்ஜ் உல்-மொலுக், இவரை குடியிருந்த அரண்மனையிலிருந்து வெளியேற்றுவதற்கு இந்த திருமணத்தை ஒரு சாக்காக பயன்படுத்தினார். [1]
இறப்பு
[தொகு]1979 இல் ஈரானியப் புரட்சியைத் தொடர்ந்து, துரான் ஈரானை விட்டு வெளியேறி ஜெர்மனிக்கு குடிபெயர்ந்தார். பின்னர், பாரிசில் உள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு இவர் 24 ஜூலை 1995 இல் இறந்தார். மேலும், இவரது உடல் சிமிட்டியர் பாரிசியன் டி தியாசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரது மகன் 2017 இல் இறந்த பிறகு இவருக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.
ஈரானில், துரான் அமீர்சுலைமானியின் வீடு, தெகுரானின் சபரானியே சுற்றுப்புறத்தில் பெசியான் மற்றும் இசுமாயிலி சந்திப்பின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. 19 ஜூலை 2016 அன்று இமாம் கொமெய்னி நிவாரண அறக்கட்டளையால் இந்தச் சொத்து தனையருக்கு விற்கப்படுவதற்கு முன்பு பகுதியளவில் அழிக்கப்பட்டு முழுமையாக இடிக்கப்பட்டு இருந்தது. [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Jalal Andarmanizadeh; Mokhtar Hadid (1999). Pahlavis (Pahlavi dynasty according to documents). Vol. 2. Tehran: Institute for Iranian Contemporary Historical Studies. p. 6.
- ↑ Niloufar Kasra. "The Lonely Queen at Reza Shah's Court". Institute for Iranian Contemporary Historical Studies (in Persian). பார்க்கப்பட்ட நாள் 19 April 2021.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 3.0 3.1 James Buchan (2013-10-15). Days of God: The Revolution in Iran and Its Consequences.
- ↑ Janet Afary. Sexual Politics in Modern Iran.
- ↑ "آلبوم عکس:خانه ملکه توران همسر سوم رضا شاه در تهران 'تخریب' شد" (in Persian). 19 July 2016.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)