துராகோனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துராகோனா
வெண்முக குயில் புறா தெற்கு சுலாவேசி தீவில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பறவைகள்
வரிசை: கொலும்பிபார்மிசு
குடும்பம்: கொலும்பிடே
பேரினம்: துராகோனா
போனபார்தி, 1854
மாதிரி இனம்
துராகோனா மனடென்சிசு
குயே & கெய்மார்டு, 1830
சிற்றினங்கள்

உரையினை காண்க

துராகோனா (Turacoena) என்பது இந்தோனேசியாவில் காணப்படும் கொலம்பிடே குடும்பத்தில் உள்ள புறாக்களின் பேரினமாகும்.

இந்தப் பேரினமானது 1854ஆம் ஆண்டில் பிரெஞ்சு இயற்கை ஆர்வலர் சார்லசு லூசியன் போனபார்தியால் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இந்தப் பேரினத்தின் மாதிரி இனம் வெள்ளை முகம் கொண்ட குயில்-புறா (துராகோனா மனடென்சிசு) ஆகும். துராகோனா என்ற பேரினப் பெயரானது 1800ஆம் ஆண்டில் பிரெஞ்சு இயற்கை ஆர்வலர் ஜார்ஜசு குவியர் அறிமுகப்படுத்திய துராகசு என்ற பேரினப் பெயரையும், "புறா" என்று பொருள்படும் பண்டைய கிரேக்கச் சொல்லான ஒயினையும் ஒருங்கிணைத்து வைக்கப்பட்டதாகும்.

இந்தப் பேரினத்தில் 3 சிற்றினங்கள் மட்டுமே உள்ளன. அவை:[2]

  • வெண்முக குயில் புறா (துராகோனா மனடென்சிசு)
  • சுலவேசிய குயில் புறா (துராகோனா சுலேன்சிசு)
  • கருப்பு குயில் புறா (துராகோனா மாடசுடா)

மேற்கோள்கள்[தொகு]

  1. Charles Lucien Bonaparte (1854). "Coup d'oeil sur les pigeons (troisième partie)" (in French). Comptes Rendus Hebdomadaires des Séances de l'Académie des Sciences 39: 1102–1112 [1112]. https://www.biodiversitylibrary.org/page/2820293. 
  2. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
"https://ta.wikipedia.org/w/index.php?title=துராகோனா&oldid=3639574" இருந்து மீள்விக்கப்பட்டது