தும்பளை
தும்பளை
Thumpalai | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°49′N 80°15′E / 9.817°N 80.250°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பிரதேச செயலர் பிரிவு | பருத்தித்துறை |
தும்பளை (Thumpalai) என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது பருத்தித்துறைக்கு வடகிழக்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
பெயர்க்காரணம்
[தொகு]தும்பளை என்னும் பெயர் "தும்பு + அளை" என்பதிலிருந்து மருவி வந்திருக்க வேண்டும். அளை என்பது வாய்க்கால் அல்லது ஓடையைக் குறிக்கும் சொல்லாகும். முற்காலத்தில் தும்புக் கைத்தொழிலே இக்கிராமத்தின் முதன்மைப் பொருளாதார நடவடிக்கையாக இருந்திருக்கலாமென இடப்பெயர் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[2]
என்றி டிரைமன் என்பவரால் 1893-இல் வெளியிடப்பட்ட "இலங்கைத் தாவரங்கள், ஒரு கையேடு" (A Handbook to the Flora of Ceylon), தும்பளை என்பது "வத்திக்கா ஒப்சிக்கியூரா" (Vatica obscura) என்ற இலங்கைக்கு சொந்தமான ஒரு பெரிய மரத்தின் தமிழ்ப் பெயர் என்று பதிவு செய்கிறது.[3]
இங்குள்ள கோவில்கள்
[தொகு]- தம்புருவளை சித்தி விநாயகர் கோவில்
- தும்பளை நெல்லண்டை அம்மன் கோவில்
- தும்பளை கற்கோவளம் வீரபத்திரர் கோயில்
- தும்பளை முத்துமாரி அம்மன் கோவில்
- தும்பளை புனித லூர்து அன்னை தேவாலயம்
இங்குள்ள பாடசாலைகள்
[தொகு]- தும்பளை சைவப்பிரகாச மகா வித்தியாலயம்
இங்கு பிறந்தவர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 11". பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்பிரல் 2024.
- ↑ இ. பாலசுந்தரம். 1989. இலங்கை இடப்பெயர் ஆய்வு - 2: வடமராட்சி - தென்மராட்சி. யாழ்ப்பாணம்: வல்லிபுர இந்து கல்வி, பண்பாட்டு சங்கம். பக். 33.
- ↑ The (place of) Thumpa’lai trees (Vatica obscura), தமிழ்நெட்
வெளி இணைப்புகள்
[தொகு]