துபிலாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செதுக்கப்பட்ட துபிலாங்கின் உருவம், கிரீன்லாந்து

துபிலாக் ( Tupilaq ) என்பது ஒரு அசுரன் அல்லது ஒரு அரக்கனின் செதுக்கலாகும்.[1][2][3] இன்யூட் மதத்தில், குறிப்பாக கிரீன்லாந்தில், ஒரு துபிலாக் என்பது மாந்திரீகம் அல்லது ஷாமனிசத்தின் பயிற்சியாளரால் விலங்குகளின் பாகங்கள் (எலும்பு, தோல், முடி, நரம்பு, முதலியன)[3] மற்றும் அதிலிருந்து எடுக்கப்பட்ட பாகங்கள், குழந்தைகளின் சடலங்களிலிருந்து எடுக்கப்பட்ட பாகங்கள் உட்பட அதனை பயன்படுத்தி ஒரு பழிவாங்கும் அரக்கனாக சித்தரிக்கப்படுகிறது. சடங்கு மந்திரங்களால் உயிரினம் உயிர் பெறுகிறது. பின்னர் அது ஒரு குறிப்பிட்ட எதிரியைத் தேடி அழிக்க கடலுக்குள் வைக்கப்படுகிறது.

துபிலாக்கைப் பயன்படுத்துவது ஆபத்தானதாகக் கருதப்பட்டது. அதை உருவாக்கியவரை விட அதிக மந்திர சக்திகளைக் கொண்ட ஒருவரை அழிக்க அனுப்பப்பட்டால், அதற்குப் பதிலாக அதை உருவாக்கியவரைக் கொல்வதற்கு திருப்பி அனுப்பலாம்.[4] ஆனால் துபிலாக் தயாரிப்பவர் தங்கள் செயலை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதன் மூலம் இதிலிருந்து தப்பிக்க முடியும்.[5]

துப்பிலாக் இரகசியமாகவும், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களிலும், அழுகக்கூடிய பொருட்களாலும் செய்யப்பட்டதால், எதுவும் பாதுகாக்கப்படுவதில்லை. கிரீன்லாந்திற்கு சென்ற ஆரம்பகால ஐரோப்பிய பார்வையாளர்கள், பூர்வீக புராணங்களால் ஈர்க்கப்பட்டனர். துபிலாக் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ஆர்வமாக இருந்தனர். எனவே இன்யூட்கள் எண்ணெய்த் திமிங்கிலத்தின் பற்களிலிருந்து அவற்றின் பிரதிநிதித்துவங்களை செதுக்கத் தொடங்கினர்.

இன்று, பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட தந்தமூக்குத் திமிங்கிலத்தின் பற்கள் மற்றும் பனிக்கடல் யானையின் பற்கள், மரம் மற்றும் துருவ மானின் கொம்பு போன்ற பல்வேறு பொருட்களிலிருந்து செதுக்கப்படுகிறது. அவை கிரீன்லாந்தின் இன்யூட் கலையின் முக்கிய பகுதியாகும். மேலும் அவை சேகரிப்புகளாக மிகவும் மதிக்கப்படுகின்றன.

தயாரிக்கும் முறை[தொகு]

ஒரு துப்பிலாக் தயாரிப்பது பெரும்பாலும் இரவில், இரகசியமாகத் தொடங்குகிறது. ஷாமன்கள் அனோராக் எனப்படும் தலை முழுவதும் மூடியிருக்கும் ஒருவகை சட்டையை அணிந்து கொண்டு, துபிலாக் தயாரிக்கப் பயன்படும் எலும்புகளுடன் பாலுறவில் ஈடுபடுவார்கள். இச்செயல்முறையின் போது மந்திரங்கள் ஓதுவதும் பாடல்களை பாடுவதிலும் ஈடுபடுவார்கள். இதற்கு பல நாட்கள் ஆகலாம்.[3] எதிரி துபிலாக்கை தன் வசம் கொண்டுவந்துவிட்டால் துபிலாக்கைத் தயாரித்தவருக்கு ஆபத்தானது என்று கதை கூறுகிறது: இந்த விஷயத்தில், துபிலாக் தயாரிப்பவர் தங்கள் செயலை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதன் மூலம் இதிலிருந்து தப்பிக்க முடியும்.[3][4][6]

பல்வேறு இன்யூட் கலாச்சாரங்களில் ஒரே வார்த்தையின் அர்த்தங்கள்[தொகு]

பல இன்யூட் கலாச்சாரங்கள் துபிலாக் போன்ற கருத்துகளைக் கொண்டிருந்தன.[7] ஆனாலும் இந்த மாறுபாடுகள் வேறுபட்டுள்ளன. சில மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்கள், பேய் போன்ற உயிரினங்கள் அல்லது ஆன்மாக்கள் உயிருள்ளவர்களை வேட்டையாடுகின்றன; சில இன்யூட் கலாச்சாரங்களில், துபிலாக் தொடர்பான கருத்துக்கள் ஷாமன்களால் மட்டுமே கையாளப்பட்டன.

கிவல்லிர்மியட், கிரீன்லாந்தின் இன்யூட், இக்லுலிங்மியூட் இன்யூட் மற்றும் இன்யூன்னைட் போன்ற தொலைதூரக் குழுக்கள் துபிலாக் கருத்தை அறிந்திருந்தன. [8] ஆனால் விவரங்கள் வேறுபட்டன:

இக்லோலிக்[தொகு]

துபிலாக் ஒரு கண்ணுக்கு தெரியாத பேய். ஷாமன் மட்டுமே அதை கவனிக்க முடியும். இது ஒரு இறந்த நபரின் ஆன்மாவாக கருதப் படுகிறது. இது அருகிலிருந்து பயமுறுத்தும். எனவே, ஷாமன்கள் அதை கத்தியைக் கொண்டு பயமுறுத்தி அதனை அடக்குவர்.[9]

கிவல்லிர்மியூட்[தொகு]

துபிலாக் கண்ணுக்கு தெரியாத உயிரினமாகவும் இருக்கிறாது. இக்ளோலிக்கின் துபிலாக்கைப் போலவே, ஷாமன் மட்டுமே அதைப் பார்க்க முடியும். இது மனித தலை மற்றும் பல்வேறு வகையான விலங்குகளின் பாகங்களைக் கொண்ட கைமேரா போன்ற உயிரினம். இது ஆபத்தானது, அது குடிமக்களைத் தாக்கக்கூடும். பின்னர், ஷாமன்கள் மட்டுமே அதை எதிர்த்துப் போராடுவார்கள். மேலும் அவர்களின் உதவி ஆவிகளை அடக்க முடியும்.[9]

கிரீன்லாந்து[தொகு]

துபிலாக்கின் உடல், மனிதனால் உருவாக்கப்பட்ட பொருளில் வெளிப்படுகிறது என்று நம்புகின்றனர். இது மக்கள் தங்கள் எதிரிகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செய்யப்படுகிறது. இது ஒரு பொம்மை போன்றது. இறந்த விலங்குகள் மற்றும் இறந்த குழந்தைகளின் உடல் பாகங்களிலிருந்தும் தயாரிக்கப்படலாம்.[9]

இன்யூன்னைட்[தொகு]

இன்யூன்னைட்டைப் பொறுத்தவரை, துபிலாக் கிறிஸ்தவத்தின் பிசாசுக்கு ஒத்ததாக இருந்தது.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. Schultz, Martin (2 November 2021). "Tupiliat". Polar Journal. பார்க்கப்பட்ட நாள் 11 December 2023.
  2. "tupilak". Asuilaak Living Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2007-12-12.
  3. 3.0 3.1 3.2 3.3 Gretel Ehrlich (2001). This Cold Heaven: Seven Seasons in Greenland. Random House. பக். 33–34, 341. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-679-75852-5. 
  4. 4.0 4.1 Kleivan & Sonne 1985: 23; Plate XLIII, XLV
  5. Kleivan and Sonne 1985: 23, 10
  6. Kleivan & Sonne 1985: 10
  7. Kleivan & Sonne 1985: 2
  8. Kleivan & Sonne 1985: 22–23
  9. 9.0 9.1 9.2 Kleivan & Sonne 1985: 23
  10. Ohokak, G.; M. Kadlun; B. Harnum. Inuinnaqtun-English Dictionary. Kitikmeot Heritage Society. 

உசாத்துணை[தொகு]

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துபிலாக்&oldid=3883221" இலிருந்து மீள்விக்கப்பட்டது