உள்ளடக்கத்துக்குச் செல்

துடுமா அருவி

ஆள்கூறுகள்: 18°31′6.68″N 82°27′12.83″E / 18.5185222°N 82.4535639°E / 18.5185222; 82.4535639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துடுமா அருவி
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/ஒடிசா" does not exist.
Map
அமைவிடம்கோராபுட் மாவட்டம், ஒடிசா, இந்தியா & விசாகப்பட்டினம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
ஆள்கூறு18°31′6.68″N 82°27′12.83″E / 18.5185222°N 82.4535639°E / 18.5185222; 82.4535639
வகைகுதிரைவால்
மொத்த உயரம்157 மீட்டர்
வீழ்ச்சி எண்ணிக்கை1

துடுமா அருவி (Duduma Waterfall) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கோராபுட் (ஒடிசா) மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்ட எல்கையில் அமைந்துள்ளது. [1] [2] [3]

நிலவியல்[தொகு]

குதிரைவால் வகை நீர்வீழ்ச்சியான துடுமா அருவி சுமார் 175 மீட்டர்கள் (574 அடி) உயரமுடையது. இது மச்சகுண்ட் நதியில் அமைந்துள்ளது. இதில் இரண்டு துணை நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இவற்றில் ஒன்று ஒடிசா பகுதியிலும் மற்றொன்று ஆந்திரப் பிரதேச பகுதியிலும் அமைந்துள்ளது.  கோராபுட்டிலிருந்து 92 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து 177 கி.மீ. தொலைவிலும் இது அமைந்துள்ளது.

நீர் மின் திட்டம்[தொகு]

மச்சகுண்ட் (துடுமா) நீர்மின் திட்டம் துடுமா நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமைந்துள்ளது. [4] இது ஆந்திர அரசுக்கும் ஒடிசா அரசாங்கத்துக்கும் இடையிலான கூட்டு மின்திட்டமாகும். ஆறு அலகுகளைக் கொண்ட இந்த திட்டம் 120 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டது.

சுற்றுலா[தொகு]

மச்சகுண்ட் புனித யாத்திரை தலமாகும். இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் போண்டா, கடாபா மற்றும் பராஜா பழங்குடி இனத்தினர் வாழ்கின்றனர்.

கேலரி[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "MACHHKUND (Duduma) | Koraput District : Odisha" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
  2. "Duduma Waterfall". siliconindia.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2016.
  3. "whereincity.com: Duduma Waterfall - Koraput". Archived from the original on 2011-11-15. பார்க்கப்பட்ட நாள் 2020-10-19.
  4. "Archived copy". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2013-03-11.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=துடுமா_அருவி&oldid=3667097" இலிருந்து மீள்விக்கப்பட்டது