உள்ளடக்கத்துக்குச் செல்

துங் கோட்டை

ஆள்கூறுகள்: 18°39′37″N 73°27′47″E / 18.660273°N 73.463142°E / 18.660273; 73.463142
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துங் கோட்டை
Tung Fort
மகாராட்டிரம், இந்தியா
ஆள்கூறுகள் 18°39′37″N 73°27′47″E / 18.660273°N 73.463142°E / 18.660273; 73.463142
இடத் தகவல்

துங் கோட்டை (Tung Fort) அல்லது கதிங்காட் ( கடினமான கோட்டை ) என்பது இந்தியாவின் புனே மாவட்டத்திலுள்ள ஒரு மலைக்கோட்டை ஆகும். [1]

அமைவிடம்

[தொகு]

இது மாளவ்லி தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 12 கி. மீ தொலைவில் உள்ளது, மேலும் லோணாவ்ளாவிலிருந்தும் அணுகலாம். துங் கோட்டை கடல் மட்டத்திலிருந்து 1075 மீட்டர் உயரத்தில் உள்ளது.[2] பவனா ஆற்றில் அணை கட்டப்பட்டதால், இது இப்போது மூன்று பக்கங்களிலும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. பாவ்னா அணையிலிருந்து அதன் அடிப்படை கிராமமான துங்கிக்கு ஒரு படகில் செல்லலாம்.

துங் கோட்டை கதிங்காட் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. மராத்தியில் "கதின்" என்ற வார்த்தைக்கு கடினம் என்று பொருள். ஏறும்போது, இந்த கோட்டையை அடைவதற்கான கடினமான இருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம். இந்த கோட்டை கூம்பு வடிவமானது. மேலும், மலையின் விளிம்பில் மிகவும் குறுகிய பாதையுடன் செங்குத்தான ஏறுதல்களைக் கொண்டுள்ளது. பாவனா அணையிலிருந்து, இந்த கோட்டையை அடைய 400 மீட்டர் மலையேற வேண்டும்.

லோணாவ்ளாவிலிருந்து, புசி அணை- சிவாஜி-பேத் சாகாபூர்-துங்வாடி வழியாக சுமார் 20 கி. மீ. தொலைவில் உள்ள அடிவார கிராமமான துங்வாடியை அடையலாம். துங்வாடி கிராமத்திலிருந்து, இந்த கோட்டையை அடைய சுமார் 300 மீட்டர் மலையேற வேண்டும்.

வரலாறு

[தொகு]

துங் கோட்டை கிபி 1600 க்கு முன்பு கட்டப்பட்டது. இது ஆதில் சாகி வம்சத்தால் கட்டப்பட்டது. பின்னர், பேரரசர் சிவாஜியால் கைப்பற்றப்பட்டது.[3] ஒரு சிறிய கோட்டையான இதில் ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட துருப்புக்களை வைத்திருக்க முடியாது. எனவே, அது நீண்ட காலத்திற்கு தன்னை தற்காத்துக் கொள்ள முடியாமல் போனது. அதன் வடிவம் மற்றும் கட்டமைப்பு காரணமாக மாவல் பிராந்தியத்தில் ஒரு கண்காணிப்பு கோபுரமாகவும் இருந்தது. புனே நகரத்திற்கு செல்லும் சாலையை முல்சி பள்ளத்தாக்குகள் பாதுக்காத்தன. மாவல் பிராந்தியத்தைச் சேர்ந்த தேஷ்முக் குடும்பத்தைச் சேர்ந்த தமாலே குடும்பத்தினர் துங் கோட்டையின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பை வைத்திருந்தனர். எதிரிகளின் படையெடுப்பின் போது, படையெடுப்பாளர்களுக்கு தற்காலிக கவனச்சிதறலை வழங்க இது உதவியது. எனவே, விசாபூர் மற்றும் லோகாகாட்டின் முக்கிய கோட்டைகள் படையெடுக்கும் இராணுவத்தை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொண்டது.[4]

கோட்டைக்கு செல்லும் ஒரு குறுகிய பாதை

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gunaji, Milind (2005). Offbeat Tracks in Maharashtra. Popular Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7154-669-5. பார்க்கப்பட்ட நாள் 2009-02-05.
  2. "Friends of Forts". Archived from the original on 2008-12-07. பார்க்கப்பட்ட நாள் 2009-02-09.
  3. Anant, Krishnáji; Mánkar, Jagannáth Lakshuman (1886). The Life and Exploits of Shivāji. Oxford University. பார்க்கப்பட்ட நாள் 2009-02-09.
  4. "Life away from life website". பார்க்கப்பட்ட நாள் 2009-02-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துங்_கோட்டை&oldid=4151432" இலிருந்து மீள்விக்கப்பட்டது