உள்ளடக்கத்துக்குச் செல்

தேஷ்முக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேஷ்முக் (Deshmukh), தென் இந்தியாவின் மகாராட்டிரம்,கோவா, கர்நாடகம், தெலங்காணா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் வட இந்தியாவின் குஜராத், இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் பிராமணர் மற்றும் ஆதிக்கச் சாதி நிலக்கிழார்களுக்கு முகலாயர் மற்றும் தக்காணச் சுல்தான்கள் மற்றும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட பட்டப் பெயர் ஆகும்.[1]

பெயரிடல்

[தொகு]

சமஸ்கிருத மொழியில் தேஷ் என்பதற்கு நிலம், நாடு என்றும் முகா என்பதற்கு தலைவர் என்று பொருள். பொதுவாக ஒரு மாவட்ட அளவிலான பகுதியின் தலைவர் என்று பொருளாகும்.[2]

பணிகள்

[தொகு]

தற்கால இந்தியாவின் மகாராட்டிரம், கர்நாடகம், தெலங்காணா, ஆந்திரப் பிரதேசம் சத்தீஸ்கர் மாநிலங்களில் வரலாற்று ரீதியாக ஆட்சியாளர்களால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்புகளை வழங்கப்பட்டவரை தேஷ்முக் என்பவர்.[3][4][5]தேஷ்முக் என்பவரே அப்பகுதியில் நிலவரி வசூலித்து ஆட்சியாளருக்கு செலுத்துவது, அப்பகுதியின் காவல் மற்றும் நீதிப் பணிகளையும் ஆற்றுவார். தேஷ்முக் குடும்பத்தின் ஆண்கள் இப்பதவி பெயரை பரம்பரை பரம்பரையாக இட்டுக்கொள்வர்.[6][1]

1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர் தேஷ்முக் பதவி ஒழிக்கப்பட்டதுடன், தேஷ்முக்குகள் வசம் இருந்த நிலங்கள் முழுவதும் மாநில அரசுகள் வசம் சென்றது. இருப்பினும் மும்பை போன்ற பகுதிகளில் சிலர் தேஷ்முக் என்பதை தங்கள் குடும்பப் பெயராகக் கொண்டுள்ளனர்.

வரலாறு

[தொகு]

முகலாயர் மற்றும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் தேஷ்முக் எனும் பட்டம் ஜமீந்தார் மற்றும் ஜாகீர்தார் போன்று, நிலக்கிழார்கள் வைத்துக் கொண்ட பட்டம் போன்றதே. கம்மவார் நாயுடு, ரெட்டி, வெலமா, தேசஸ்த் பிராமணர், காயஸ்தர்கள், லிங்காயத்துகள், கோலிகள் தேஷ்முக்[7]மற்றும் சில முஸ்லீம் குடும்பத்தினர் தேஷ்முக் பட்டத்துடன் வாழ்ந்தனர். [8][9] [10]

கோல்கொண்டாவை ஆட்சி செய்த குதுப் சாஹி வம்ச ஆட்சியின் போது தக்காணத்தில் தேசஸ்த் பிராமணர்களே தேஷ்முக்குகளாக இருந்தனர். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் தேஷ்முக்குகள் ஜமீந்தார் மற்றும் ஜாகீர்தார்களாக இருந்தனர்.[11]


குறிப்பிடத்தக்கவர்கள்

[தொகு]
  1. நானாஜி தேஷ்முக்
  2. சி. து. தேஷ்முக்
  3. கோபால் ஹரி தேஷ்முக்
  4. துர்காபாய் தேஷ்முக்
  5. விலாஸ்ராவ் தேஷ்முக்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Pranay Gupte (15 December 2013). Healer: Dr Prathap Chandra Reddy and the Transformation of India. Penguin UK. p. 578. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789351185666. பார்க்கப்பட்ட நாள் 15 December 2013.
  2. J. G. Duff, A history of Mahratta Vol 1, p. 39
  3. "Liberation of Hyderabad state". https://telanganatoday.com/liberation-of-hyderabad-telangana-movement/amp. 
  4. Kurian, Alka (21 August 2012). "Hyderabad State Administration". பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781136466717. https://books.google.com/books?id=v9_fCgAAQBAJ&q=deshmukh+patel+patwari+in+Nizam+administration&pg=PA15. 
  5. Pranay Gupte (15 December 2013). Healer: Dr Prathap Chandra Reddy and the Transformation of India. Penguin UK. p. 578. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789351185666. Deshmukh was a historical title given to a person who was granted a territory of land in certain regions of India, specifically Maharashtra, Andhra Pradesh and Karnataka.
  6. S.C.Dube (30 October 2017). Indian Village. Routledge Publications. p. contents. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781351209212. பார்க்கப்பட்ட நாள் 30 October 2017.
  7. Lethbridge, Sir Roper (2005). The Golden Book of India: A Genealogical and Biographical Dictionary of the Ruling Princes, Chiefs, Nobles, and Other Personages, Titled Or Decorated of the Indian Empire (in ஆங்கிலம்). New Delhi, India: Aakar Books. p. 521. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87879-54-1.{{cite book}}: CS1 maint: date and year (link)
  8. Gordon, Stewart (February 2007). The Marathas 1600-1818, Volume 2. Cambridge University Press. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521033169.
  9. Kumar Suresh Singh (1998). India's Communities, Volume 5. Oxford University press. p. 2082. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195633542.
  10. Naqvi, S.M. Raza. “APPOINTMENT AND CONFIRMATION OF DESHMUKHS IN THE MUGHAL EMPIRE.” Proceedings of the Indian History Congress, vol. 33, 1971, pp. 223–226., www.jstor.org/stable/44145335. Accessed 28 July 2020.
  11. Appasaheb Ganapatrao Pawar (1971). Maratha History Seminar, May 28-31, 1970: papers. Shivaji University. p. 31. பார்க்கப்பட்ட நாள் 1 February 2008.
  12. Indo-British Review, Volume 10. Indo-British Historical Society. 1983. p. 44. Indeed, the official titles of the Zamindars of Guntur had been Desmukh ( Executive-Collector), Mannavar (Head of Police), and Despandi (Chief Accountant); moreover, two of the five zamindari families were Desastha.
  13. Coenraad M. Brand (1973). State and Society: A Reader in Comparative Political Sociology. University of California Press. p. 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520024908.
  14. Stewart Gordon (1993). The Marathas 1600-1818, Volume 2. Cambridge University Press. pp. 50–53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521268837.
  15. Brown, C. (1908). Yeotmal District Volume A Descriptive: By C. Brown and R. V. Russell (in ஆங்கிலம்). Printed at the Baptist mission Press.
  16. Āruṭla Rāmacandrāreḍḍi (1984). Telangana struggle: memoirs. People's Publishing House. p. vi. The Deshmukh system of allocation of whole villages to some was introduced by the Nizam when Salarjung I was the prime minister on the advice of British after 1857

ஆதாரம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேஷ்முக்&oldid=4049283" இலிருந்து மீள்விக்கப்பட்டது