தி. மாரிமுத்து
தி. மாரிமுத்து (பிறப்பு: சூன் 23, 1966) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நுண்கலையில் பட்டயக் கல்வி பெற்றுள்ள இவர் “யூமா. வாசுகி” எனும் புனைப்பெயரிலும் எழுதி வருகிறார்.
வாழ்க்கை[தொகு]
இவர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையில் 1966 சூன் 23 அன்று பிறந்தவர். நு ”உனக்கும் உலகுக்கும்”, “தோழமை இருள்”, “அமுத பருவம்” எனும் கவிதை நூல்களையும், “உயிர்த்திருத்தல்” எனும் சிறுகதைப் படைப்பையும், “மோர்னிங் திக்கெட்ஸ்” எனும் ஓவியப் படைப்பையும் வழங்கியிருக்கிறார். இவர் எழுதிய "ரத்த உறவு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. மலையாள எழுத்தாளர் ஓ. வி. விஜயனின் ‘கஸாக்குகளின் இதிகாசம் என்ற புதினத்தைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக, 2017 ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றார்.[1]
சிறுகதைத் தொகுப்பு[தொகு]
- உயிர்த்திருத்தல் 2001
- தூயகண்ணீர் (சிறார் கதை) - 2019
கவிதைத் தொகுப்புகள்[தொகு]
- தோழமை இருள்
- இரவுகளின் நிழற்படம்
- அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு
மொழி பெயர்ப்புகள்[தொகு]
- சிங்கிஸ் ஐத்மாத்தவின் சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று,
- ஆண்டர்சன் கதைகள்
- ஜோனதன் ஸ்விஃப்ட்டின்
- கலிவரின் பயணங்கள்
- எஸ். சிவதாஸின் ‘மாத்தன் மண்புழுவின் வழக்கு (மலையாளத்திலிருந்து)
- ஓ. வி. விஜயனின் ‘கஸாக்குகளின் இதிகாசம் (மலையாளத்திலிருந்து)
ஆதாரம்[தொகு]
- ↑ மு.முருகேஷ் (2017 திசம்பர் 23). "யூமா வாசுகி: மொழிபெயர்ப்பாளராய் ஒரு படைப்பாளி!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 26 திசம்பர் 2017.
- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.