உள்ளடக்கத்துக்குச் செல்

தி. சே. சுப்பராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தி. சே. சுப்பராமன் (பிறப்பு: டிசம்பர் 12, 1945) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருச்சியில் பிறந்த இவர் இயற்பியலில் முனைவர் பட்டமும், தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், துறைத்தலைவர், பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையத்தின் இயக்குநர் போன்ற பொறுப்புகளில் பணியாற்றியிருக்கிறார். தமிழில் நாடகங்கள், கட்டுரைகள், கதைகள் போன்றவைகளையும் எழுதியிருக்கிறார். “அறிவியல் தமிழ்ப் பாவலர்” என்று பாராட்டப் பெற்றவர். இவர் எழுதிய “ஒலி நூறு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._சே._சுப்பராமன்&oldid=3614110" இலிருந்து மீள்விக்கப்பட்டது