திவானி தேசாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திவானி தேசாய்
பிறப்புபம்பாய்
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்எல்பின்ஸ்டன் கல்லூரி
எஸ்.வி.கே.எம். இன் என்.எம்.ஐ.எம்.எஸ்
ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை கல்வி நிறுவனம்
சேவியர் தகவல் தொடர்பு கல்வி நிறுவனம்
அறியப்படுவதுஇயங்குபடம்

திவானி தேசாய் (Dhvani Desai) என்பவர் ஒரு இந்திய இயங்குபட திரைப்பட படைப்பாளி, கவிஞர் ஆவார். மன்பசந்த் (சரியான போட்டி), சக்ரவியூக் ஆகிய கலை சார்ந்த இயங்கு படங்களுக்காக இவர் மிகவும் பிரபலமானவர்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

திவானி தேசாய் மும்பையில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், திரைப்படப் படைப்பாளிகளைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை டாக்டர் சுதிர் தேசாய் ஒரு கவிஞர், சிந்தனையாளர், அறிஞர். இவரது தாயார், தாரிணி தேசாய், குஜராத்தியின் ஒரு நவீன சிறுகதை எழுத்தாளர். இவரது அக்காள், சமஸ்கிருதிராணி தேசாய், ஒரு குஜராத்தி கவிஞர், சகோதரர் சன்ஸ்கர் ஒரு மூத்த ஆவணப்பட உருவாக்குநர் ஆவார்.

தொழில்[தொகு]

திவானி தேசாய் மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் கல்லூரியில் புள்ளியியல் துறையில் இளம் அறிவியல் பட்டமும், மும்பை எஸ்.வி.கே.எம் இன் என்.எம்.ஐ.எம்.எஸ் கல்லூரியில் நிதித்துறையில் முதுகலை வணிக மேலாண்மையில் பட்டமும் பெற்றார். பின்னர் ஜம்னாலால் பஜாஜ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் கணினி மேலாண்மையில் முதுகலை பட்டையமும் பெற்றார்.

திவானி தேசாய் 1991 இல் இயங்குபட துறையில் நுழைந்தார். இவர் ஒரு கணினி இயங்குபட பணியகத்தில் பயிற்சியாளராக இணைந்தார். அங்கு இவர் 2டி இயங்குபடம் குறித்து கற்றுக்கொண்டார். அதற்குப் பிறகு, 3டி இயங்குபடத்தில் முறையான பயிற்சிக்காக மும்பையில் உள்ள சேவியர்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன் நிறுவனத்தில் சேர்ந்தார். பிறகு இரண்டு இயங்குபட பணியகங்களில் பணிபுரிந்தார். பின்னர் கம்ப்யூட்டர் கிராஃபிட்டியில் (அப்போது, இந்திய இயங்குபடத் துறையில் ஒரு முன்னோடி பணியகம்) சேர்ந்தார். பின்னர் பத்மஸ்ரீ ராம் மோகனின் வழிகாட்டுதலின் கீழ் 2டி இயங்குடத்தை லைவ் ஆக்ஷன் (ம) 3டியுடன் இணைத்து ஏராளமான விளம்பரங்களில் பணியாற்றினார். பறிகு இவர் தனது சொந்த இயங்குபட பணியகத்தை நிறுவினார்.

மகாத்மா காந்தி அறக்கட்டளை காந்திஜியின் கொள்கைகளை சித்தரிக்கும் ஐந்து திரைப்படங்களை தயாரித்தது. அதில் ஒ்ன்றாக இயங்குபட குறும்படமான தி மகாத்மா படத்தை தனது அண்ணன் சன்ஸ்கார் உண்ட் இணைந்து இயக்கினார். இப்படம் 2001 இல் தெகுரான் பன்னாட்டு இயங்குபட விழாவிலும் மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவிலும் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டன.

சில்ட்ரன்ஸ் ஃபிலிம் சொசைட்டி ஆஃப் இந்தியா தயாரிப்பில், திவானி தேசாய் 11 நிமிட இயங்குபடமான மன்பசந்த் ( சரியான போட்டி) இயக்கினார். செர்மனி, செக் குடியரசு, சுலோவாக்கியா, கிரேக்கம், துருக்கி, கனடா, தைவான் கென்யா போன்ற பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிட இது அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் பல பன்னாட்டு விருதுகளையும் பெற்றது. இதன் கதையானது பஞ்சதந்திரம் சார்ந்த கதையாகும். இதை பொத்தடை கலையின் ஒரு வடிவமான வைஷ்ணவ சாஞ்சி கலைப் பாணியைப் பயன்படுத்தியது உருவாக்கபட்டது. இதை உருவாக்க இரண்டு ஆண்டுகள் ஆனது. அதில் 42 கலைஞர்கள் பணியாற்றினர்.

மன்பசந்த் ஆலிவுட்டில் நடந்த பன்னாட்டு இயங்குபட திரைப்பட விழாக்களில் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் பல பன்னாட்டு திரைப்பட விழாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2007 நவம்பரில் ஐதராபாத்தில் நடந்த த கோல்டப் எலிபெண்ட் ( 15வது பன்னாட்டு குழந்தைகள் திரைப்பட விழா) திரைப்பட விழாவில் இப்படத் திரையிடப்பட்டது. மேலும் 2008 இல் புதுதில்லியில் நடந்த ஆசிய பெண்கள் திரைப்பட விழாவின் துவக்கத்திலேயே திரையிட்டப்பட்டது.

இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் தயாரித்த சித்திரப்படம் மற்றும் இயங்குபடங்களில் திவானி தேசாய் பணியாற்றியுள்ளார்.

இந்தியாவில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வை ஊட்டும் வகையில் திரைப்படப் பிரிவால் முதன்முறையாக தயாரிக்கபட்ட சக்ரவியூக் இயங்கு படத்தை இவர் இயக்கினார். இதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8வது ஆண்டு விழாவில் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், இந்திய வணிகர்களுக்கான ஆளுமை அறக்கட்டளை (PCGT), இந்திய வணிகர்கள் சங்கம் (IMC) ஊழல் எதிர்ப்பு பிரிவு, பம்பாய் பட்டய கணக்காளர்கள் சங்கம் ஆகியவற்றிறின் ஏற்பாட்டில் வெளியிடப்பட்டது. இந்த படம் உலகளவில் பல விருதுகளையும் பரிந்துரைகளையும் பெற்றது. [1][2]

விருதுகள்[தொகு]

  • கோல்ட் ரெமி விருது, 41வது உலக விழா ஊஸ்டன், அமெரிக்கா 2008 ( மன்பசந்துக்கு - சரியான போட்டி )
  • வெண்கல உலகப் பதக்கம் 2008 நியூயார்க் திரைப்பட விழா
  • வெள்ளி விருது ( இயக்குனரின் சிறந்த சிறுகதை), இந்திய ஆவணப்பட தயாரிப்பாளர் சங்கம், 2007
  • பிரிக்ஸ் டானூப் விழா விருது, ஸ்லோவாக்கியா 2008 [3]
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய படத்திற்காக டி.ஒ.பி.டி.யி இல் சிறந்த நடைமுறைகளுக்கான விருது[தெளிவுபடுத்துக], இந்திய அரசு மற்றும் யஷாதா, 2014 [4]
  • இந்திய அரசின் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் விருது, 2015
  • மிகவும் பிரபலமான திரைப்பட விருது, மும்பை சர்வதேச திரைப்பட விழா, 2014 [5]

பெருமைகளும் சாதனைகளும்[தொகு]

இவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian animation film on RTI In Sweden?s I.N.S.A.N.E Animation Film Fest (sic)". 25 Aug 2015. Archived from the original on 5 February 2016. பார்க்கப்பட்ட நாள் 29 Sep 2018.
  2. "IMC Journal Volume 107/Issue 3 November-December 2013" (PDF). Archived from the original (PDF) on 29 September 2018. பார்க்கப்பட்ட நாள் 29 Sep 2018.
  3. "Animation films steal Mumbai International Film Festival show this year". 5 Feb 2014. Archived from the original on 15 March 2018. பார்க்கப்பட்ட நாள் 29 Sep 2018.
  4. "Indian Animation – Weekly Update (#3)". 30 March 2014 இம் மூலத்தில் இருந்து 29 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180929224213/https://www.indiewire.com/2014/03/indian-animation-weekly-update-3-124297/. 
  5. "Mumbai International Film Festival 2014 doffs hat to human spirit with awards at closure". 10 Feb 2014. Archived from the original on 25 April 2014. பார்க்கப்பட்ட நாள் 20 Sep 2014.
  6. "66th National Film Awards for 2018 announced". Jury. 9 August 2019. 
  7. "BIFFES JURY 2020". {{cite web}}: Missing or empty |url= (help)
  8. "PIFF JURY 2016". {{cite web}}: Missing or empty |url= (help)
  9. "Eight Indians on NYF International Television & Film Awards 2014 Grand Jury". 25 October 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவானி_தேசாய்&oldid=3886937" இலிருந்து மீள்விக்கப்பட்டது