தில்லி தமிழ் கல்விச் சங்க மேல்நிலைப் பள்ளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தில்லி தமிழ் கல்விச் சங்கத்தின் மேல்நிலைப் பள்ளிகள் (Delhi Tamil Education Association Senior Secondary Schools) என்பவை இந்தியாவின் தலைநகரான தில்லியில் அமைந்துள்ள எட்டு மேல்நிலைப் பள்ளிகள் ஆகும்.

வரலாறு[தொகு]

தில்லி தமிழ்க் கல்விச் சங்கம் 1919 இல் சிம்லாவில் உள்ள மதராசி கல்விச் சங்கத்தில் (MEA) பதிவு செய்யப்பட்டது. இது பிரித்தானிய அரசாங்கத்தில் பணிபுரிந்த தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரிய தமிழ் விழுமியங்களை கற்பிக்க விரும்பியதால் உருவாக்கப்பட்டது.

இதன் முதல் பள்ளி 1923 இல் நிறுவப்பட்டது. அப்போது தில்லியில் வாழும் சிறிய சமூகத்தினரான தமிழர்கள் இரண்டாவது கட்டடத்துக்கு நன்கொடைகள் மூலம் நிதி திரட்டினர். இன்று தில்லி தமிழ்க் கல்விச் சங்கம் 7,000 மாணவர்களும், 500 ஆசிரியர்களையும் கொண்ட ஏழு மேல்நிலைப் பள்ளிகளைக் கொண்டுள்ளது.

  • 1923: விஜயதசமி நாளில், முதல் மதராசி கல்விச் சங்கப் பள்ளி சிம்லாவில் ஒரு ஆசிரியரையும் ஒரு மாணவரையும் கொண்டு நிறுவப்பட்டது.
  • 1924: சனவரியில், புது தில்லியில் ஒரு துவக்கப் பள்ளி திறக்கப்பட்டது
  • 1925: பள்ளி கல்வி ஆணையத்தால் அங்கீகரம் பெறப்பட்டது.
  • 1931: மந்திர் மார்க்கில் (அப்போது ரீடிங் ரோடு என்று அழைக்கப்பட்டது) நகராட்சி பள்ளி கட்டடங்களில் பள்ளிக்கு இடவசதி செய்து தரப்பட்டது.
  • 1945: புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
  • 1946: உயர்கல்வித் துறை தொடங்கப்பட்டது.
  • 1949: முதல் தொகுதி மாணவர்கள் தில்லி உயர்நிலைப் பள்ளித் தேர்வில் கலந்து கொண்டனர்.
  • 1950: சங்கத்தின் வெள்ளி விழா மார்ச் 5 அன்று கொண்டாடப்பட்டது.
  • 1951: லோடி தோட்டத்தில் புதிய ஆரம்பப் பள்ளி திறக்கப்பட்டது.
  • 1953: கரோல் பாக்கில் மற்றொரு துவக்கப் பள்ளி திறக்கப்பட்டது.
  • 1955: லோடி தோட்டத்தில் ஒரு பள்ளியின் கட்டுமானம் தொடங்கியது.
  • 1956: மந்திர் மார்க்கிலிருந்து உயர்நிலைப் பள்ளி வகுப்பறைகள் லோடி தோட்டத்திற்கு இடம் பெயர்ந்தன.
  • 1958: இலட்சுமிபாய் நகரில் (அப்போது கிழக்கு வினய் நகர் என்று அழைக்கப்பட்டது) ஒரு நடுநிலைப் பள்ளி திறக்கப்பட்டது.
  • 1959: மந்திர் மார்க் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
  • 1960: தலைமை அமைச்சர் பண்டித ஜவகர்லால் நேரு லட்சுமி பாய் நகர் பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார்.
  • 1961: மோதி பாக் தொடக்கப் பள்ளி திறக்கப்பட்டது.
  • 1962: லட்சுமிபாய் நகர் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
  • 1963: கரோல் பாக் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
  • 1964: ஆர். கே. புரத்தில்]] துவக்கப் பள்ளி திறக்கப்பட்டது. [1]
  • 1966: மோதி பாக் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
  • 1968: ஆர். கே. புரத்தில் உள்ள தொடக்கப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
  • 1970: மோதி பாக்கில் உள்ள பள்ளி உயர்நிலை நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
  • 1972: மதராசி கல்விச் சங்கம் என்ற சங்கத்தின் பெயர் தில்லி தமிழ்க் கல்விச் சங்கம் (DTEA) என மாற்றப்பட்டு பள்ளிகள் DTEA பள்ளிகள் எனப் பெயர் மாற்றப்பட்டன.
  • 1975: ஜனக்புரி தமிழ்ச் சங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப ஜனக்புரியில் உள்ள பள்ளியை முறைப்படி தில்லி தமிழ்க் கலவிச் சங்கம் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது.

பள்ளிகள்[தொகு]

மந்திர் மார்க், லோடி எஸ்டேட், லக்ஷ்மிபாய் நகர், மோதி பாக், பூசா சாலை (கரோல் பாக்), ஆர்.கே.புரம் , ஜனக்புரி ஆகிய இடங்களில் தி.த.க.ச ஏழு மேல்நிலைப் பள்ளிகளை நடத்துகிறது. மயூர் விஹார் பகுதி - 3இல் இல் எட்டாவது பள்ளி கட்டப்பட்டு வருகிறது, இதற்கு தில்லி மேம்பாட்டு ஆணையம் 8087 சதுர மீட்டர் இடத்தை ஒதுக்கியுள்ளது. [2]

தி.த.க.சங்கத்துக்கு சொந்தமானதாக அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களாக செயல்படும் பள்ளிகள் லோடி தோட்டத்தில் உள்ள சங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள், முதன்மையாக தமிழர்களுக்காக செயல்படுகிறது என்றாலும், தில்லியில் வாழும் தமிழரல்லாத பிற மாணவர்களையும் ஏற்றுக்கொள்கிறது.

பள்ளிகள் ஒன்றய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் கல்வி இயக்குநரகத்தாலும், அரசாங்கத்தாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தில்லியின் என்.சி.டி. ஏழு பள்ளிகளில் ஆங்கிலம், தமிழ், இந்தி, பிரஞ்சு, ஜெர்மன் எசுப்பானியம் ஆகிய ஆறு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.

நிதி நிலமை[தொகு]

பள்ளிகளுக்கு 100% தில்லி மாநில அரசு நிர்வாகம் நிதியளிக்கிறது. மீதமுள்ளவை மாணவர்களின் பெற்றோரால் ஆண்டு நன்கொடைகளாக அளிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Delhi Tamil Education Association Senior Secondary Schools
  2. "DTEA School Website".