திரெசுடன் வெள்ளை வைரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரெசுடன் வெள்ளை வைரம்
எடை62 காரட்டுகள் (12.4 g)
நிறம்D
வகைIIa
வெட்டுCushion
மூல நாடு India
கண்டுபிடிப்பு17ஆம் –18வது நூற்றாண்டு

திரெசுடன் வெள்ளை வைரம் ('Dresden White Diamond) ( திரெசுடன் ஒயிட் அல்லது சாக்சன் ஒயிட் என்றும் அழைக்கப்படுகிறது) 62-காரட் (12.4 கிராம்) எடை கொண்ட பட்டைத் தீட்டப்பட்ட வைரமாகும். [1] தென்னிந்தியாவின் கோல்கொண்டாசுரங்கங்களில் இருந்து தோன்றியிருக்கலாம். [1]

இதன் பெயர் ஜெர்மனியின் சாக்சனியின் தலைநகரான திரெசுடனில் இருந்தும், இரத்தினத்தின் வெள்ளை நிறத்திலிருந்தும் பெறப்பட்டது. [1]

வரலாறு[தொகு]

வைரத்தை முதன்முதலில் சாக்சனியின் அரசரான முதலாம் பிரடெரிக் அகஸ்டஸ்க்குக் காட்டியபோது, அவர் ரத்தினத்தின் வெட்டு, தெளிவு மற்றும் வண்ணத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டு அதை எந்த விலைக்கும் வாங்க நினைத்தார். வைரத்திற்கு அவர் $750,000 முதல் $1,000,000 இடையே ஏதாவது ஒரு தொகையை செலுத்தியதாகக் கூறப்படுகிறது. [1]

2012 இல் கிரீன் வால்ட்

தனது மகத்தான சேகரிப்புகளை வைப்பதற்காக, அவர் திரெசுடன் கோட்டையில் கிரீன் வால்ட் எனும் மாளிகையை அமைத்தார். [1]

1746 ஆம் ஆண்டில், ஜீன் ஜாக் பல்லார்ட் தனது அரசன் பிரடெரிக் அகஸ்டஸுக்காக விரிவான இந்த பொக்கிஷ மாளிகையை வடிவமைத்து அதன் வடிவமைப்பின் உச்சியில் இந்த வைரம் வைக்கப்பட்டது. இருப்பினும், ஏழாண்டுப் போரின் முடிவில் இந்த மாளிகை சேதமடைந்தது. பின்னர் திரெசுடன் வெள்ளை வைரம் 19 பெரிய வைரங்கள் மற்றும் 216 சிறிய கற்களால் வடிவமைக்கப்பட்ட தோள்பட்டை முடிச்சு ஆபரணத்தில் இணைக்கப்பட்டது. [2]

முதலாம் உலகப் போருக்குப் பிறகு, இதிலுள்ள பொருட்கள் பொதுக் காட்சிக்கு வைக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் ஆரம்பம் வரை அவைகள் அங்கேயே இருந்தன. 1942 இல் போரின் உச்சத்தில், சேகரிப்புகள் கோனிக்ஸ்டீன் கோட்டைக்கு மாற்றப்பட்டன.

1945 ஆம் ஆண்டில், சோவியத் இராணுவ ஆணையம் கிரீன் வால்ட் உள்ளடக்கங்களை மாஸ்கோவிற்கு எடுத்துச் சென்றது. ஆனால் 1958 இல் அவற்றைப் பாதுகாப்பாக திருப்பி அனுப்பியது. அசல் திரெசுடன் அருங்காட்சியகம் இருந்த அதே தளத்தில் கட்டப்பட்ட திரெசுடனின் நவீன அருங்காட்சியகத்தில் சேகரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

நவம்பர் 25, 2019 அன்று, 2019 திரெசுடன் கொள்ளையின் போது, கிரீன் வால்ட்டில் இருந்த வெள்ளை வைரம் உட்பட நகைகளில் பெரும்பகுதியை திருடர்கள் குழு திருடிச் சென்றது. [3] [4]

நவம்பர் 17, 2020 அன்று, திருட்டு தொடர்பாக மூன்று பேர் பெர்லினில் கைது செய்யப்பட்டனர். 1,638 பேர் அடங்கிய காவல் துறை அதிகாரிகளின் நடவடிக்கையானது முக்கியமாக தெற்கு பெர்லினில் உள்ள நியூகோல்னில் அவர்களின் தேடுதலை மையப்படுத்திய பின்னர். [5]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Dresden White Diamond". InternetStones.com. Archived from the original on 2008-07-05. பார்க்கப்பட்ட நாள் 2019-11-30.
  2. Balfour, Ian (1987). Famous Diamonds. 
  3. Givetash, Linda and Carlo Angerer (2019-11-28). "62-carat diamond among nearly 20 jewels stolen in German museum heist". NBC News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-30.
  4. France-Presse, Agence (2019-11-28). "Police offer €500,000 reward over Dresden diamond heist". https://www.theguardian.com/world/2019/nov/28/police-confirm-14-pieces-stolen-in-theft-of-9m-dresden-white-diamond. 
  5. "Three arrested over spectacular Dresden museum jewellery heist". Al Jazeera. Al Jazeera Media Network. 17 November 2020. பார்க்கப்பட்ட நாள் 22 February 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரெசுடன்_வெள்ளை_வைரம்&oldid=3722320" இலிருந்து மீள்விக்கப்பட்டது