திருவாலூர் மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவாலூர் மகாதேவர் கோயில்

திருவாலூர் மகாதேவர் கோயில் இந்தியாவின் கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆலங்காடு கிராமத்தில் திருவாலூர் கரா என்னுமிடத்தில் உள்ளது. இந்தக் கோயில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும். [1]

இங்குள்ள மூலவர் சிற்பம் அக்னி பிரதிஷ்டை என்று நம்பப்படுகிறது. அதாவது சிவபெருமானின் மூன்றாவது கண் திறந்த நிலையில் இருக்கும். கோயிலின் கிழக்குத் திசையில் குளம் உள்ளது. ஏனெனில், சிற்பத்திலிருந்து வெளிப்படும் நெருப்பு (அக்னி) மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். அந்த விளைவை மென்மைப்படுத்தும் வகையில் குளம் இவ்வாறாக இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் கணபதிக்கான ஒரு சன்னதி உள்ளது.

திருவாலூர் மகாதேவர் கோயிலின் துணைக்கோயிலாக, கீழணிக்காவு மிக அருகில் அமைந்துள்ளது. அங்கு விஷ்ணு, பகவதி மற்றும் நாகர் சிலைகள் உள்ளன.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]