திருகோணமலை மறைமாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருகோணமலை மறைமாவட்டம்
Dioecesis Trincomaliensis
Trincomalee Diocese
அமைவிடம்
நாடுஇலங்கை
மாநிலம்கொழும்பு
பெருநகரம்கொழும்பு
புள்ளிவிவரம்
பரப்பளவு8,397 km2 (3,242 sq mi)
மக்கள் தொகை
- மொத்தம்
- கத்தோலிக்கர்
(2010 இன் படி)
1,607,865
78,518 (4.9%)
விவரம்
திருச்சபைஉரோமன் கத்தோலிக்கம்
வழிபாட்டு முறைஇலத்தீன் வழிபாட்டு முறை
உருவாக்கம்25 ஆகத்து 1893
கதீட்ரல்புனித மரியாள் பேராலயம், திருக்கோணமலை
தற்போதைய தலைமை
திருத்தந்தைபிரான்சிசு
ஆயர் †நோயெல் இம்மானுவேல்
பேராயர் †மால்கம் ரஞ்சித்
முன்னாள் ஆயர்கள்கிங்ஸ்லி சுவாம்பிள்ளை

திருகோணமலை மறைமாவட்டம் (Diocese of Trincomalee, இலத்தீன்: [Dioecesis Trincomaliensis] error: {{lang}}: text has italic markup (உதவி)) இலங்கையின் கிழக்கேயுள்ள ஒரு உரோம கத்தோலிக்க மறைமாவட்டம் ஆகும். இதன் தற்போதைய ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகை ஆவார்.

வரலாறு[தொகு]

திருகோணமலை மறைமாவட்டம் கொழும்பு உயர்மறைமாவட்டம், மற்றும் யாழ்ப்பாண மறைமாவட்டம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக 1893 ஆகத்து 25 இல் நிறுவப்பட்டது.[1] இம்மறைமாவட்டம் 1967 அக்டோபர் 23 இல் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1] 1975 டிசம்பர் 19 இல் இம்மறைமாவட்டத்தின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட அனுராதபுரம் மறைமாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது.[1] இதன் பின்னர் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டம் 2012 சூலை 3 இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டு திருகோணமலை மறைமாவட்டம் என மீண்டும் பெயரிடப்பட்டது. மற்றைய பகுதி மட்டக்களப்பு மறைமாவட்டம் என்ற பெயரில் தனியான மறைமாவட்டம் ஆனது.[1]

ஆயர்கள்[தொகு]

# ஆயர் பதவியில்
1வது சார்ல்சு லாவின் 1898 - 1913
2வது காஸ்டன் ரொபிச்செசு 1917 - 1946
3வது இக்னேசியசு பிலிப் திரிகெரசு கிளெனி 1947 - 1974
4வது லியோ ராஜேந்திரம் அந்தோனி 1974 - 1983
5வது கிங்ஸ்லி சுவாம்பிள்ளை 1983 - 2015
6வது நோயெல் இம்மானுவேல் 2015 -

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Diocese of Trincomalee-Batticaloa". GCatholic.