திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருகோணமலை பட்டினமும் சூழலும் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருகோணமலை பட்டினமும் சூழலும் என்பது இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தின் நகரப்பகுதியையும் அதனைச் சூழவுள்ள அயற்பகுதிகளையும் உள்ளடக்கிய பிரதேச சபைப் பிரதேசத்தினைக் குறிக்கும்.[1].

திருகோணமலைப் பட்டினம் 42 கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்டதாகும். தமிழ், முஸ்லீம், சிங்களம் என மூவின மக்களைக் கொண்டுள்ளபோதிலும் தமிழர்களே இப்பிரதேசத்தில் செறிந்து வாழ்கின்றனர். 2002 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இப்பிரதேசத்தில் 23, 831 குடும்பங்களைச் சேர்ந்த 102, 487 பொதுமக்கள் வாழ்கின்றனர்.

கிராம அலுவலர் பிரிவுகள்[தொகு]

 1. வில்லூன்றி
 2. மனையாவெளி
 3. அருணகிரிநகர்
 4. தில்லைநகர்
 5. சோனகவாடி
 6. அரசடி
 7. பட்டணத்தெரு
 8. பெருந்தெரு
 9. மட்டிக்களி(மட்கோவ்)
 10. அபேபுர
 11. ஜின்னாநகர்
 12. உவர்மலை
 13. சிவபுரி
 14. லிங்கநகர்
 15. உப்புவெளி
 16. திருக்கடலூர்
 17. முருகாபுரி
 18. ஆண்டான்குளம்
 19. சிங்கபுர
 20. மிகுந்துபுர
 21. கன்னியா
 22. பீலியடி
 23. மாங்காயூற்று
 24. அன்புவெளிபுரம்
 25. புளியங்குளம்
 26. செல்வநாயகபுரம்
 27. வரோதயநகர்
 28. பாலையூற்று
 29. கோவிலடி
 30. பூம்புகார்
 31. வெள்ளைமணல்
 32. நாச்சிக்குடா
 33. சீனக்குடா
 34. காவத்திக்குடா
 35. முத்துநகர்
 36. கப்பல்துறை
 37. சுமேதரங்காபுர
 38. சாம்பல்தீவு
 39. சல்லி
 40. இலுப்பைக்குளம்
 41. வில்கம்
 42. வெல்வெறி

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. பொதுவாக பட்டினம் என்பது தமிழ் இலக்கியத்தின்படி கடல் அருகே அமைந்துள்ள நகரங்களைக் குறிப்பதாகும். எடுத்துக்காட்டாக சிலப்பதிகாரத்தில் காணப்படும் பூம்புகார்ப் பட்டினம்.

வெளியிணைப்பு[தொகு]